குற்றவாளிகளுக்கு எதிரான கருத்துகள் , ஒரு சமூகத்துக்கு எதிரான கருத்துகள் அல்ல!டயகம சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உட்படுத்திமை குறித்து எழுதினால் சில இஸ்லாமியர்கள் தங்களது சமூகத்துக்கு எதிரானது போல எதிர் கருத்துகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
இது இஸ்லாமிய சமூகத்துக்கு எதிரான கருத்து அல்ல. ஒரு அப்பாவி அநியாயமாக பாதிக்கப்பட்டு இறந்தமையின் ஆற்றாத் துயரிலே நின்று நியாயம் கோரும் கருத்துகளாகும்.ஈஸ்ட்டர் தாக்குதல் நேரத்தில் கூட இப்படித்தான் சிலர் கொதித்தார்கள்.
பின்னர் அனைத்து விடயங்களும் வெளியே வந்த பின் அடங்கிப் போனார்கள்.நீதிக்குப் பின்தான் பாசம் என ஒரு காலம் இருந்தது.
இப்போதெல்லாம் நம் பாசம்தான் முதன்மையானது என மாறிவிட்டது. சிலர் காவல்துறை பேச்சாளரின் பேச்சையே எடிட் பண்ணி வெளியிடும் அளவுக்கு சில ஊடகவியளார்கள் செயல்பட்டு சின்னத் தனத்தை காட்டிக் கொண்டார்கள்.
இதில் சம்பந்தப்பட்டவர்களைத் தவிர அந்த குடும்பத்தில் உள்ள ஏனையோரோ அல்லது அவர்களது சமூகத்தவரோ குற்றவாளிகள் இல்லை.அதை உணர்ந்து குற்றவாளிகளுக்கு எதிராக குரல் கொடுத்தாலே நீங்கள் வணங்கும் இறைவன் உங்களை காப்பான்.
இல்லை ! அவனே வெறுத்து ஒதுக்குவான்.மனிதம் இல்லாதவன் இறைவனை வழிபட்டும் பிரயோசனமே இல்லை.