தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன்.தொலைக்காட்சியில் இருந்து ஆரம்பித்திருந்தாலும் தற்போது வேற லெவல் புகழை அடைந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்தநிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இவர் தனது உறவினரான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தம்பதிக்கு ஆராதனா என்ற பெண் பிள்ளை உள்ளது.
இந்த நிலையில் ஆர்த்தி இரண்டாவது முறையாக கர்ப்பமானார். இதையடுத்து அவருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த செய்தியை ட்விட்டரில் 18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம் என பதிவிட்டுள்ளார்.
தன் தந்தையே தனக்கு மீண்டும் மகனாக பிறந்துள்ளார் என சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்…