கூத்தின் மூல வேர்களைத் தேடி… தமிழர் மத்தியில் நடனம், நாடகம், கூத்து.உரைத்தொடரில் 11 ஆவது உரை இது——————————————————–
——- இவ்வுரை வாரம் தோறும் சனிக்கிழமை இலங்கை நேரம் மாலை 7.30 தொடக்கம் 9.30 வரை நடை பெறு வதனை யாவரும் அறிவீர்கள் இவ்வுரைமூலம் வாரம் தோறும் உலக நாடுகளில் வாழும் ஆற்றுகைக் கலைஞர்கள் பலரைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுகிறேன்.
அவர்கள் வாழும் கலை உலகை, கருத்துலகை அறியும் வாய்ப்பும் கிட்டுகிறதுஉரையின் இடையே பல கலைஞர்கள் அறிமுகப் படுத்தப் படுகிறார்கள், அதில் தம் பாடல் திறனை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்இன்னொரு வகையில் இது கலைஞர் சங்கமமாகவும் அமைந்து மகிழ்ச்சி தருகிறது.
சென்ற முறை நடந்த உரையாடலில் இது வரை நடைபெற்ற உரைகளின் சுருக்கம் கூறப்பட்டு அது சம்பந்தமான உரையாடல் இடம் பெற்றதுசென்ற முறை என் அழைப்பின் பேரில் கூத்துகலையில் பெரு நாட்டமுடைய அன்புராசா அடிகளார், தவமைந்தன் றொபேர்ட், ஜோன்சன் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு தம் பாடல்களால் நிகழ்வை அலங்கரித்தனர்அன்புராசா அடிகளார் மன்னார் வாசாப்பு பற்றி சிறியதோர் அறிமுகம் செய்து சில வாசக்ப்பா பாடல்களைப் பாடினார்.
அவர் மன்னாரின் பிரபல கூத்துக் கலைஞர் குழந்தை செபமாலையின் மகனாவார்தவமைந்தன் றொபேர்ட் மன்னார்க் கூத்து பாடல்களின் இராகங்களைக் கண்டறிந்தவர் அவர் தான் கண்டறிந்த சொல பாடல்களை ஹார்மோனிய இசையுடன் பாடிக்காட்டினார், அவர் யாழ் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைபீட இசை விரிவுரையாளர்ஜோன்சன் ராஜ்குமார் யாழ்ப்பணக்கூத்துப் பாடல்களையும் முல்லைத்தீவுக் கோவலன் கூத்துப் பாடல்களையும் பாடிக்காடினார்
அவர் நாடகமும் அரங்கியலும் சேவைக்கால ஆலோசகர் யாழ் திருமறைகலா மன்றத்தின் இயக்கு சக்திகளில் ஒருவர்மட்டக்களப்பின் இராம நாடகப் வடமோடிப்பாடல் ஒன்றும் அறிமுகம் செய்யப் பட்டதுமலை நாட்டுப் பாடல் அறிமுகம் செய்வது தனி ஒரு நிகழ்வாக நடைபெறும்நான் அழைத்தவுடன் மறுக்காது வந்து பாடல்கள் பாடிக்காட்டிய இவர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்
அடுத்த உரை 11 ஆவது உரை 19.6.2021 சனிக்கிழமை மாலை 7.30 தொடக்கம் 9.30 வரை நடைபெறும்சேர வாரும் செகத்தீரேID NO. 7662275951Pass Word TAMILOPERA