”வெந்து தணிந்தது காடு ” | 102 பேரின் பண முதலீட்டின் முடிவு

தனது புதிய படைப்பு தொடர்பாக இயக்குனர் மதி சுதா மனம் திறந்தார்

எமது Dark days of heaven திரைப்படத்தின் தமிழ்த் தலைப்புக்காக காத்திருந்த அனைவருக்கும் நன்றிகளுடன் உங்கள் முன் பார்வைக்கு வைக்கின்றேன்.

”வெந்து தணிந்தது காடு”Crowdfunding முறையில் பணம் சேர்த்து ஆரம்பிக்கப்பட்ட இத்திரைப்படம் 2 1/2 வருட பணச் சேகரிப்பில் 102 பேரின் பண முதலீட்டின் முடிவாக உருவானதாகும். முழுமையாக பணம் சேராவிடினும் மிகுதிக்கு என் சொந்தப் பணத்தை இட்டு முடித்திருக்கின்றேன்.

இந்தப் படம் என் படம் என்பதல்ல எங்கள் கதை என்பதே உண்மையானதாகும். இதன் வெற்றி தங்கியிருப்பது உங்கள் ஒவ்வொருவரிலும் தான்…பகிர விரும்புபவர்கள் படத்தை தரவிறக்கிப் பகிர்ந்து கொள்ளுங்கள்.இதற்குத் தலைப்பிட முனைந்த அனைவருக்கும் நன்றிகளுடன்.

இப்படத்துக்காக உழைத்த கலைஞர்களுக்கும். என்னை நம்பி முதலிட்ட ஒவ்வொருவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நன்றிச் செதுக்கலுடன்மதிசுதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!