இந்தப் பயணக்கட்டுப்பாட்டு காலத்தில் வீட்டிலிருந்தவாறே ஓர் நிகழ்நிலை போட்டியில் பங்குபெற்று பணப்பரிசில்கள் மற்றும் பெறுமதியான பரிசில்களை வெல்லக்கூடிய அரிய வாய்ப்பு.
Pearlyz production வழங்கும் இலங்கையின் நகைச்சுவைக் கலைஞர்களுக்கான போட்டி ‘Virtual Star Hunt – Season 01’.
நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று தான்.. நீங்கள் தனி ஆளாக உங்கள் திறமையின் மூலம் பலரையும் சிரிக்க வைக்க முடியுமா? உங்கள் கையடக்கத் தொலைபேசியில் உங்கள் திறமையை ஒளிப்பதிவு செய்து +94760181199 என்ற இலக்கத்திற்கு அல்லது pearlyzproduction@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு அனுப்பி வையுங்கள்.
போட்டியில் பங்குபெறுபவர்களுக்கு வயதெல்லை கிடையாது. அதேவேளை, நீங்கள் அனுப்பும் காணொளிகள் 2 முதல் 3 நிமிடங்களுக்கு உட்பட்டதாக அமைய வேண்டும்.
வெற்றி பெறும் திறைசாலி போட்டியாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் வரையான பணப்பரிசில் அல்லது பெறுமதிவாய்ந்த கையடக்கத்தொலைபேசி பரிசாக கிடைக்கும் என ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிரிக்க வையுங்கள், பணம் வெல்லுங்கள்.