அண்மையில் நாடளாவிய ரீதியில் விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையால் நாட்டின் பொருளாதாரத்திற்கு 60 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சரான அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டினது நாளாந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது.பத்து நாட்களுக்கு முடக்கினால் , மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்படும் இழப்பு 150 பில்லியன்ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.,
இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.குறிப்பாக, சரியான நேரத்தில் ஆடை தயாரிப்புகளை வழங்க இயலாமை சமீபத்திய நாட்களில் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது .
அன்றாட வாழ்வை சம்பாளித்து வந்த ஏராளமான மக்கள் இக்காலகட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டனர்.நாம் சிறிய பொருளாதார நாடாகவுள்ளமையால் நாட்டை முழுமையாக முடக்காமல் சிறந்த கொவிட் -19 தடுப்பு செயற்த்திட்டத்தை முன்னெடுப்பதே சிறப்பானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.