சிரேஷ்ட ஊடகவியலாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க ஜனாதிபதியின் ஊடக பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (29) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் இருந்து அவர் தனது நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார்.
கொழும்பு ஆனந்த கல்லூரியின் பழைய மாணவரான அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரி ஆவார்.
தனது 27 வருட ஊடக வாழ்க்கையில், பிரபல அறிவிப்பாளராக சிறந்து விளங்கிய அவர், ஒரு முன்னணி இலத்திரனியல் ஊடக அலைவரிசையில் நிகழ்ச்சி முகாமையாளராகவும், பணிப்பாளராகவும், பணிப்பாளர் நாயகமாகவும் மற்றும் அலைவரிசையின் தலைவர் உட்பட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
இலங்கை வானொலியில் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்பத்திய திரு. கிங்ஸ்லி ரத்நாயக்க, தனது படைப்புத் திறமைகள் மூலம் ஊடகத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்தவராவார்.