பூவன் மீடியா பூவன் மதீசன் தயாரிப்பில் உருவாகியுள்ள விழிப்புணர்வு மற்றும் எழுச்சி பாடலான முன்னேறு ப்படல் இன்று வெளியாகியது.
பாடல் வரிகளை Poovan Matheesan,சொல்லிசை வரிகளை CV Laksh ,Sarangan Ravindran ஆகியோரும் பாடலுக்கான குரலை Bairavi ,Pakir Mohan ,Poovan Matheesan ஆகியோர் சிறப்பாக பாடியுள்ளனர்.
Joseph Christopher பேட் கருவியை இசைத்துள்ளார்.இசை கலவையை G.Sayeetharshan கவனிக்க இசையை பூவன் மதீசன் சிறப்பாக செய்துள்ளார்.
இதோ எழுச்சியூட்டும் பாடல் வரிகள்.வானம் தாண்டி நீயும் வாடா வாழ்ந்து பார்க்கலாம்
மரண வாயில் சென்று கூட வெற்றி தேடலாம்
உந்தன் வாழ்வு உந்தன் கையில் உலகை வெல்லலாம்
வெற்றி தேடி நித்தம் வாழ்வில் கொடியை நாட்டலாம்
உன் உடலின் உழைப்பில் வெற்றி
அது தினமும் எரியும் பற்றி
உன் உதிரம் கொதிக்கும் உணர்வை ஊட்டி
திரட்டு கூட்டம் உன்னை சுற்றி
வா முன்னேறு
உண்மைகள் எந்நாளும் ஓயாது
வா முன்னேறு
உன்கைகள் எந்நாளும்
ஓயாது
வானம் தாண்டி நீயும் வாடா வாழ்ந்து பார்க்கலாம்
மரண வாயில் சென்று கூட வெற்றி தேடலாம்
உந்தன் வாழ்வு உந்தன் கையில் உலகை வெல்லலாம்
வெற்றி தேடி நித்தம் வாழ்வில் கொடியை நாட்டலாம்
நீ நடக்கும் போது குத்தும் முள்ளும்
போர் களத்தில் தூசியாகுமே
தீ நிலத்தில் கால் பதிக்கும் போது
உன் வேகம் கொண்ட பாதம் நூறு
பாதை போடுமே
நீ நடக்கும் போது குத்தும் முள்ளும்
போர் களத்தில் தூசியாகுமே
தீ நிலத்தில் கால் பதிக்கும் போது
உன் வேகம் கொண்ட பாதம் நூறு
பாதை போடுமே
உந்தன் பாதை தேர்ந்து எடு
நாளும் தடை சூழட்டும்
தடை தாண்டி வீழ்ந்து மீண்டும் எழு
போனதெல்லாம் போகட்டும்
உந்தன் பாதை தேர்ந்து எடு
நாளும் தடை சூழட்டும்
தடை தாண்டி வீழ்ந்து மீண்டும் எழு
போனதெல்லாம் போகட்டும்
கனவை துரத்தி நடையைக் கட்டு
கிடைப்பதெல்லாம் வெற்றியே
நீ முயற்சி செய்து கிடைத்த தோல்வி
தோல்வி அல்ல வெற்றியே
உன் கனவை துரத்தி நடையைக் கட்டு
கிடைப்பதெல்லாம் வெற்றியே
நீ முயற்சி செய்து கிடைத்த தோல்வி
தோல்வி அல்ல வெற்றியே