இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய நிதி முதலீட்டில் (ஹிரு தொலைக்காட்சிக்கு அடுத்ததாக) சுப்ரீம் டிவி தான்.
இலங்கை தொலைக்காட்சி துறையில் ஆரம்பிக்கப்படும் 100 % உள்ளூர் நிறுவனம் ஆகும்.
இதன் தலைமை காரியாலயம் உலக வர்த்தக மையத்தின் கிழக்கு கோபுரத்தில் 15 வது மாடியில் அமைந்துள்ளது.
பரீட்சார்த்த ஒளிபரப்பு எதிர்வரும் 16 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. மார்ச் மாதம் வரை வரையறுக்கப்பட்ட திட்ட நிகழ்ச்சி அட்டவணைக்கு கீழ் ஒளிபரப்பைத் தொடங்கும்.
மார்ச் மாதம் முதல் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்படும் .
முதல் கட்டமாக செய்தி ஒளிபரப்பு ஆரம்பமாகும் . கூடிய விரைவில் முன்னணி அலைவரிசைகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு நிகரான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் என சுப்ரீம் டிவியின் நம்ப தகுந்த வட்டார செய்தி கூறுகிறது.
சுப்ரீம் டிவி குழுவினருக்கு இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.