2019 ஆம் ஆண்டிற்கான தொலைக்காட்சி அரச விருது வழங்கல் விழா தற்போது கொழும்பு தாமரைத்தடாக கலையரங்கில் இடம்பெற்றுது.
சகல தொலைக்காட்சி அலைவரிசையில் இருந்து 2018 டிசம்பர் 31 ஆம் திகதி வரை காண்பிக்கப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளின் நடுவர்களின் தெரிவுகளுக்கு விருதுகள் வழங்கப்படடன.
சிறந்த தொலைக்காட்சி புலனாய்வு தேடல் செய்தி அறிக்கையிடலுக்கான அரசவிருதினை டான் தொலைக்காட்சியின் சாட்சியம் நிகழ்ச்சிக்காக பெற்ற சுலக்சனுக்கு கிடைத்தது.
இந்த விருது தொடர்பாக டான் குழுமத்தின் தலைவர் குகநாதன் முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
சுலக்ஷனுக்கான விருது அவனுக்கு மட்டும் சொந்தமானது. டான் டிவியில் நிகழ்ச்சிகளைத் தயாரிப்பது என்பது மற்றைய தொலைக்காட்சிகளைப்போல அல்ல. ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் ஸ்கிரிப் தயாரிப்பதிலிருந்து அதனை வெளியே கொண்டு வருவது வரை அனைத்தையும் கவனிப்பது அவர்களே. அவர்களே நிகழ்ச்சி சொந்தக்காரர்கள். அடுத்த வருடம் இன்னும் பலர் விருது பெறுவார்கள். சுலக்ஷன் மற்றவர்களையும் விருதை நோக்கி நகர வைத்திருக்கிறான்.
தேசிய விருது பெற்ற சுலக்சனுக்கு இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.