ஈழத்து படைப்புகளுக்கு கிடைக்குமா அங்கீகாரம்

சினிமா என்பது பலருக்கு கனவு .சிலருக்கு உணவு அதையும் தாண்டி ஒரு சிலருக்கு மட்டுமே அது உணர்வு.

அப்படிப்பட்ட சினிமாவின் மூலதனம் ரசிகர்களின் கைத்தட்டல் தான் .அந்த கைதட்டலை பெறுவதட்கு சரியான படைப்பை ரசிகர்களுக்கு கொண்டு பொய் சேர்க்க வேண்டியது ஊடகம் தான்.

அது அச்சு ஊடகமாக இருந்தால் என்ன இலத்திரனியல் ஊடகமாக இருந்தால் என்ன அவை தங்களது பொறுப்பை சரியாக செய்தால் நமது படைப்புகளை நாம் இலகுவாக ரசிகர்களுக்கு கொண்டு பொய் சேர்க்கலாம்.

கடந்த பல வருடங்களாக கொண்டாடப்பட்டு வரும் யாழ் சர்வதேச சினிமா விழாவில் இருந்து நமது கலைஞர்களுக்கு கிடைத்தது என்ன அவர்கள் இதன் மூலம் பயனடைந்தது என்ன என்ற கேள்வி எங்களுக்குள் எழுகிறது.

நமது படைப்பாளிகளின் படைப்புகள் சர்வதேச அரங்கத்தில் விருது பெரும் போது அந்த படைப்பு ஏன் உள்ளூர் சினிமா விழாக்களில் புறக்கணிக்க படுகிறது?.

சர்வதேச விழா என்ற பெயரில் நடப்பவை தான் என்ன.வியாபார நோக்கத்திற்காக இவை நடத்தப்படுகிறதா? இல்லை ஈழத்து படைப்பாளிகளின் மன ஆறுதலுக்காக நடத்தப்படுகிறதா? போன்ற சந்தேகங்கள் எழுகிறது?

ஐந்தாவது யாழ்ப்பாண சர்வதேசத் திரைப்பட விழா.
“சுயாதீன சினிமாவைக் கொண்டாடுதல்” எனும் மகுடத்தில் தொடர்து ஐந்தாவது தடவையாக த் திரைப்பட விழா நடக்கவிருக்கிறது.
இதில் உலக சினிமாக்கள் திரையிடலும் வழிகாட்டற் கருத்தரங்குகளும் இடம்பெற உள்ளன.

ஈழத் திரைத்துறை சார்ந்தவர்களும் ஆர்வலர்களும் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.மஜெஸ்ட்டிக் சிட்டி- யாழ்.
கைலாசபதி அரங்கு- யாழ்.பல்கலைக் கழகம்.பிரிட்டிஸ் கௌன்சில் – யாழ்.அமெரிக்கன் சென்ரர்- யாழ். போன்ற இடங்களில் செப்டம்பர் 3முதல் 9வரை. நடக்கவுள்ளது.

இதன் மூலம் நமது படைப்பாளிகளுக்கு நன்மைகள் கிடைத்தால் சரி தான்.விழா குழுவினருக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!