இலங்கை வரலாற்றில் ஒரே இடத்தில முதற் தடவையாக 30 குரல்கள்
இலங்கையின் இசை துறை என்பது எது வரைக்கும் என்றால் நாம் உடனே இன்னிசை இசை நிகழ்ச்சி வரை தான் என்று சொல்லுவோம்.ஆனால் அதையும் தாண்டி இன்னும் ஏராளமான சாதனைகளை படைக்க கூடிய சந்தர்ப்பங்கள் இருந்தும் அது நடக்காமல் உள்ளது.
இப்படி நமது பாடகர்களின் திறமையை சர்வதேசம் வரை கொண்டு செல்ல முடியும் என்றால் அங்கே மிக பெரிய ஒற்றுமை வேண்டும் .
தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு மனோ கணேசன் அவர்களின் சிந்தனைக்கமைய இலங்கையில் முதற் தடவையாக பிரபல பாடகர்கள் 30 பேரின் பங்களிப்புடன் சுருதி பிரபாவின் இசையமைப்பில் தமிழ் எம் உயிர் என்போம் பாடல் தயாராகி வருகிறது.
மாண்டொழின் அந்தோணி சுரேந்திர , வீணை வாகேஷன் சிவநாதன் , பிலுட் ரோஷன் தர்மவிக்கறம் ஆகியோரின் பங்களிப்புடன் இந்த படைப்பின் ஒளிப்பதிவு அண்மையில் சுதந்திர சதுக்கத்தில் பதிவுசெய்யப்பட்டது.
பிரபல பாடகர்கள் அனைவருக்கு கலந்து கொண்ட இந்த படைப்பு செப்டெம்பர் 2 ஆம் திகதி நெலும் போக்குன கலையரங்கில் நடைபெறும் சிறப்பு விழாவில் வெளியிடப்படவுள்ளது.
எப்படியோ இந்த முயற்சியை பாராட்டியே ஆகவேண்டும்