நீர் ஓடையில் மர்மமான முறையில் இறந்த சிறுத்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

செ. திவாகரன்

நவலப்பிட்டிய வெரலுகஷின்ன பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில்
நீர் ஓடையில் விழுந்து மர்மமான முறையில் இறந்த, நன்கு வளர்ந்த சிறுத்தையின் உடலை கம்பளை வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் (27) அன்று மீட்டெடுத்தனர்.

தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வனப்பகுதிகளின் எல்லைகளில் உள்ள ஓடைகளுக்கு அருகில் வனவிலங்குகளைப் பிடிப்பதற்காக வைக்கப்படும் கம்பிக் கண்ணிகளில் சிறுத்தைகள் தொடர்ந்து சிக்கிக் கொள்கின்றன. அவ்வாறு சிக்கிய நிலையில் தப்பிக்க முயன்று, ஓடைகளில் விழுந்து அல்லது காயமடைந்து அவை உயிரிழந்ததா ? அல்லது சில நாட்களுக்கு முன்பு, இரையைத் துரத்தும்போது தவறி சிறுத்தை விழுந்ததா ? என்ற கோணத்தில் விசாரணைகளை வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றன

நீர் ஓடைக்கு அருகிலுள்ள கோபி தோட்டத்தில் வேலைக்குச் சென்ற ஒரு தொழிலாளி சிறுத்தையின் உடலைக் கண்டு, நவலப்பிட்டி காவல்துறை மூலம் வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து பின்ன சம்பவ இடத்துக்கு வருகை தந்த அதிகாரிகள் சிறுத்தையின் உடலை பத்திரமாக நீரோடையிலிருந்து மீட்டு நாவலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதவானிடமிருந்து உத்தரவு பெற்ற பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக
ரந்தெனிகல கால்நடை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படும் என்று வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!