லண்டனில் ஆசிய செல்வாக்காளர் விருதை வென்றார் ஐபிசி தமிழ் முன்னாள் வானொலி முகாமையாளர் சதீசன்

ஐபிசி தமிழின் முன்னாள் வானொலி முகாமையாளரும் ஈழத்தமிழ் ஊடகவியலாளருமான சதீசன் சத்தியமூர்த்தி (சதீஷ்), லண்டனில் நடைபெற்ற Asian Influencers Awards 2026 விழாவில் “சமூகத் தாக்கம் செலுத்தும் செல்வாக்காளர்” (Community Impact Influencer) என்ற விருதைப் பெற்றுள்ளார்.

பல பிரிவுகளில் வழங்கப்பட்ட விருதுகள்

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டு, சமூக ஊடகங்களிலும் இணையத் தளங்களிலும் தாக்கம் செலுத்துபவர்களை அங்கீகரிப்பதே இதன் நோக்கமாகும் . ஆடை–வாழ்க்கைமுறை, கலை–பொழுதுபோக்கு, உணவு–பயணம், வணிகம், சுகாதாரம், உள்ளடக்கப் படைப்பாளர்கள், சமூகத் தாக்கம் எனப் பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

சதீசன் சத்தியமூர்த்தி ஐபிசி தமிழ் வானொலி முகாமையாளராகவும் அதேபோல தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்புப் பொறுப்புகளையும் வகித்தார். அதுமட்டுமல்லாது ஐபிசி தமிழின் 2017 ம் ஆண்டுக்கான சிறந்த ஊடகவியலாளருக்கான விருதையும் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

 ஈழத்தமிழர்களின் அரசியல் பரப்பில் கவனம் பெற்ற நிகழ்ச்சி

அவர் ஐபிசி தமிழ் வானொலியில் நடத்திய “மனங்கள் பேசட்டும்” நிகழ்ச்சி, சமூகத்தில் வெளிப்படையாகப் பேசத் தயங்கும் விடயங்களைக் கலந்துரையாடலுக்கு உரிய ஒரு பொருளாக கொண்டுவந்ததுடன் ,புலம்பெயர் தேசச் செயற்பாட்டாளர்கள், இலங்கை, இந்திய அரசியல்வாதிகள் எனப் பல தரப்பினரையும் பேச வைத்த “செய்திகளுக்கு அப்பால்” நிகழ்ச்சியும் ஈழத்தமிழர்களின் அரசியல் பரப்பில் கவனம் பெற்றது.

ஐபிசி தமிழுடன் நீண்ட காலம் பயணித்து, நேயர்களின் மனங்களுக்கு நெருக்கமானவராக எம்முடன் இருந்த எமது நண்பர் சதீசன் சத்தியமூர்த்திக்கு, இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!