மத எல்லைகளைக் கடந்து…
அனோஜனுக்காக நாங்களும் இருக்கிறோம்!” — வவுனியாவில் குரல் கொடுத்த முஸ்லிம் மக்கள்



ஒரு மனித உயிரின் விடுதலைக்காக…
மத எல்லைகளைக் கடந்து…
வவுனியா முஸ்லிம் சமூகமும் அனோஜனுக்காக தனது குரலை உயர்த்தியது! ![]()
வவுனியா பிரதான பள்ளிவாசலில், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து, அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்துகளை வழங்கியும், கடிதங்களை கையளித்தும், கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டும் தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.
இந்த மனிதநேயப் போராட்டத்தில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த சமயத் தலைவர்களும் கலந்து கொண்டு, அனோஜனின் விடுதலைக்கான வேண்டுகோளுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.
இது ஒரு குடும்பத்திற்காக எழுந்த குரல் மட்டுமல்ல…
மனிதநேயத்திற்காக எழுந்த குரல்! ![]()
மதங்கள் வேறாக இருக்கலாம்…
ஆனால் ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற மனிதநேயம் ஒன்றுதான்!
![]()
சவூதி அரசே… அனோஜனின் தவறை மன்னித்து, அவரை விடுதலை செய்!
#SaveAnojan#அனோஜன்#வவுனியா#முஸ்லிம்_மக்கள்#மனிதநேயம்#மதநல்லிணக்கம்#விடுதலைக்காக#கவனயீர்ப்பு
