மாக்ரட் in மீரா குறும்படம்

நடிகை மாக்ரட், மாக்ரட் in மீரா என்ற குறும்படத்தை தயாரித்துள்ளார். இதில் மாக்ரட், நவ்ஷாட், காளிதாசன், கலைவதி, வசந்தகுமாரி, விஜய், கேசவன், ஹரிசன், நரேஸ், மேனன், டிலுக் ஷன், கவிஷ்க, சதீஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

மஸ் கெலியாவில் பிறந்து வளர்ந்த நடிகை மாக்ரட், மஸ்கெலியா சென்.ஜோசப் கல்லூரியில் தான் படித்துள்ளார். சிறுவயதிலேயே இவருக்கு நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இவரது அப்பா அழகுமலை, அம்மா கீதை. இவர்களுக்கு இவர் ஒரே பிள்ளை. சிறிய குடும்பம். இவர், 17 வயதில் இத்துறைக்கு வந்தபோது மறைந்த மரிக்கார் எஸ்.ராம்தாஸ் மூலமாக ‘கல்யாணம் கட்டிப்பார்” தொலைக் காட்சி நாடகத்தில் நடிக்க இருந்தபோது அது நிறுத்தப்பட்டது. இந்நாடகத்தில் கே.சந்திரசேகரனும் நடிக்க இருந்தார்.

இவருக்கு இதனால் இலங்கையில் மூத்த கலைஞர்களுடன் நடிக்கவிருந்த வாய்ப்பு நழுவிப்போனது. இதை இன்று நினைத்தாலும் கவலையாக இருக்கிறது என்று இவர் அடிக்கடி கூறி வருவதுண்டு. இவர் வசந்தம் தொலைக்காட்சியில் ஔிபரப்பாகி வந்த “வாங்க பழகலாம்” நிகழ்ச்சியில் நடித்தது மாத்திரமன்றி நடனமாடியும் இருக்கிறார்.

மேடை நாடகம், தொலைக்காட்சி நாடகம் என பல்வேறு துறைகளிலும் தனது பெயரை நிலைநாட்டி வருகிறார். தற்போது இவரே தனது சொந்த முயற்சியில் ஒரு குறுந்திரைப்படத்தை தயாரித்துள்ளார். இத்திரையிடப்படத்தை விரைவில் வௌியிட இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!