ஊடகவியலாளர் பா. பாலேந்திரனுக்கு மின்னியலாளர்தேசிய தொழில்திறன் சான்றிதழ்

நுவரெலியா மாவட்டம் லிந்துலை பகுதியை சேர்ந்த ஊடகவியலாளர், தேசபந்து, சமாதான நீதிவான்
பா. பாலேந்திரன், தேசிய தொழில்திறன் மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்று மின்னியலாளர்
(Electrician – Level 4 (Q5) சான்றிதழைப் பெற்றுள்ளார்.

இவர் ஊடகவியலாளராக கடமையாற்றும் அதே வேலை சிறந்த சமூக சேவையாளராகவும் சமாதான நீதிவானாகவும் மின்னியலாளராகவும் சேவையாற்றுகின்றார்.

மின்னியல் துறையில் அவரது தொழில்முறை திறன், அனுபவம் மற்றும் உயர்ந்த தரமான பணிசெயல்பாடுகளை மதிப்பிடும் வகையில் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சாதனை, உள்ளூர் தொழில் வாய்ப்புகளில் அவரின் நம்பகத்தன்மையையும் தொழில் தரத்தையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலேந்திரனை வாழ்த்தி பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எமது செய்தி சேவை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஊடகவியலாளர் பா. பாலேந்திரனுக்கு இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!