சரித்திரத்தில் இடம் பிடித்த ”தமிழன்”புதிய பணிப்பாளருக்கு வாழ்த்து மழை

தெரண குழுமத்தின் பணிப்பாளர்களில் ஒருவராக பதவி உயர்வுப்பெற்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராஜா ராமசாமி அவர்களின் பதவியுயர்வை சிறப்பிக்கும் முகமாக நடந்த ஒண்டு கூடலில் அரசியல் பிரமுகர்கள் , ஊடக நிறுவன பணிப்பாளர்கள் என பலர் கலந்துகொண்டனர் .

இந்நிகழ்வை தெரண முகாமைத்துவம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்விற்கு கலந்துகொள்ள ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்தேன். பிஸியாக இருப்பதால் வர முடியாத நிலை இருப்பதாக அமைச்சர்கள் சிலர் என்னிடம் கூறினர். என தனது முகப்புத்தக பதிவில் சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராஜா ராமசாமி கூறியுள்ளார்.

பல தசாப்த காலங்காலாக இலங்கை அச்சு ஊடகத்துறையில் பல அனுபவத்தையும் கொண்டவர் தான் சிவராஜா ராமசாமி அவர்கள்

இவ் ஒன்று கூடலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டமை அனைவர் கவனத்தையும் ஈர்த்தது

எது எப்படியோ நாம் அனைவரும் பெருமை பட வேண்டிய ஒரு விடயம் . நமது சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் தெரண முகாமைத்துவ கட்டமைப்பில் பணிப்பாளர் அந்தஸ்த்தை அடைந்திருப்பது நமது தமிழ் ஊடக சமூகத்திற்கு எண்ணிலடங்கா பலத்தை தந்துள்ளது.

புதிய பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராஜா ராமசாமி அவர்களுக்கு இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!