தமிழ் FM மூடப்பட்டதா? இல்லை முடிச்சு விடப்பட்டதா?

தமிழ் FM மூடப்பட்டதா? என்ற கேள்வி தான் ரசிகர்கள் மத்தியில் தற்போது உள்ளது

ஆனால் உண்மை அதுவல்ல. இரண்டு தமிழ் வானொலிகள் எதற்கு என்று? ஒரு கேள்வி எழுந்துள்ளது .

அப்படி இருக்கும் போது தமிழ் வானொலியா அல்லது ஆதவன் வானொலியா என்ற கேள்வி வந்த போது அங்கு ஆதவனுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் FM வானொலியில் பணிபுரிந்த அனைவருக்கும் வாய்ப்பு தர முத்தர்தர வானொலி ஒன்று தற்போது பேசி வருகிறது.

இந்த ஒன்று சேர்க்கப்பட்ட வானொலிகள் தொடர்பாக சிரேஷ்ட ஊடகவியலாளர் நடராஜா குருபரன் தனது முகப்புத்தக பதிவில் பின்வருமாறு தெரிவிக்கிறார்

பிரித்தானியாவில் ஆரம்பித்த பயணம் தலைநகர் கடந்து இலங்கையெங்கும் விரிகிறது!
கரங்கோர்க்கும் இரு தடங்கள், ஒரே வடமாய்ப் பெருந்தேரிழுக்கும் பணியில் ஆதவன்.
காலவோட்ட அலையில் சிக்கி, இல்லாமற் போவதனைத் தடுத்து, வலுப்பெறச்செய்ய, ஒன்றிணைக்கப்பட்ட ஆற்றல் மிக்க இளையதோர் அணியுடன் மீண்டும் ஒரு பயணம்!
2000 ஆண்டுகளில் அடக்குமுறைகளைக் கடந்து, இலங்கையின் தமிழ் வானொலித்துறையில் செய்தித்துறை கோலோச்சிய புதியதொரு வானொலிக் கலாசாரம், செல்நெறி உருவாகியது.
2016ன் பின் ஐரோப்பிய – பிரித்தானிய வானொலிக் கலாசாரத்தில் புதியதொரு புரட்சியை LYCA MEDIA வின் ஆதவன் வானொலி உருவாக்கியது.
புலம்பெயர் சூழலில் தமிழ் வானொலி ஒன்று நிலைபெற முடியாது என்ற வாய்ப்பாட்டை தகர்த்து, 9 ஆவது வருடத்தில் கால்பதிக்கும் ஆதவன் வானொலி (LYCA MEDIA) லண்டன் பெருமபாகத்தை கடந்து தமிழர்கள் வாழும் பகுதிகள் எங்கும் விரைவில் ஒலிவீசத் தயாராகிறது.
ஆதவனின் (LYCA MEDIA) உலகலாவிய பயணத்தில் மற்றுமொரு மையில் கல்லாக இலங்கை முழுவதுமான இந்தப் பயணம் நம்பிக்கையுடன் ஆரம்பமாகிறது.
பழைய அத்திவாரத்தில் பலமானதும், புதுமையானதுமான பிரமாண்ட கட்டிடத்தை நோக்கி…
உண்மையானதும், விரைவானதும், காத்தரமானதுமான செய்திகள், செய்திப் பார்வைகள், விவரணங்கள், உள்நாட்டு, உலகலாவிய தகவல்கள், மனதை மயக்கும் பாடல்கள், குறைவிலாத பொழுது போக்கு நிகழ்ச்சிகள், அறிவுசார் நிகழ்ச்சிகள், தெவிட்டாத விளம்பரங்கள், நிலைய குறி இசை என, வானொலித் துறையின் முக்காலங்களையும் தரிசிக்கத் தயாராகுங்கள்.
உங்களின் ஆதரவே எமது வெற்றியின் இரகசியம்!
இனி ஒரு விதி செய்வோம்!
தமிழ் எவ்.எம் (Tamil FM) 99.5 – 99.7 –
ஆதவன் றேடியோ – 95.3 FM

TamilFM #AthavanRadio #athavantv #AthavanNews #lyacmedia

இவ்வாறு பதிவிட்டுள்ளார் .

எது எப்படியோ விரைவில் ஒரு மற்றம் வருமாம் …. வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!