ஒரு காணொளி பாடல் ஒன்றை பதிவு செய்து அதை வெளியீடு செய்வதை மிக இலகுவாக சொல்லிவிட முடியாது.
தற்போதைய சூழ் நிலையில் மிக கடினமானது . இருப்பினும் நமது படைப்பாளிகள் இன்னும் காணொளி பாடல்களை உருவாக்கி வருகிறார்கள்.
அந்த வகையில் பக்திப் பாடல்கள் பாடுவதில் நமது அருணாவை மிஞ்ச யாருமில்லை
கடந்த எட்டாம் திகதி அவரது ஓம் ஓம் ஓம் முருகா பாடல் அவ்வளவு அருமையாக வெளியாகியுள்ளது .
கொழும்பு ஜெயந்திநகர் ஜிந்துப்பிட்டி சிவசுப்பிரமணிய ஆலயத்துக்கான பக்தி பாடலாக வெளியாகியுள்ள இந்தப்பாடலை இயற்றி பாடியவர் ஜி ஏ அருணா .
செந்தூரன் அவர்களின் இசையில் வெளியாகியுள்ள இந்த பாடல் .
மென் மேலும் இவர் இசைத்துறையில் பிராகாசிக்க எமது வாழ்த்துக்கள்
