ஒரே வானொலியில் பல வருடங்களாக அறிவிப்பாளராக இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.
அவர்களிடம் பல திறமைகள் இருந்தாலும் அவர்களை நாம் வேறு வானொலியில் அறிவிப்பாளராக நினைத்துக் கூட பார்க்க முடியாது.
ஆனால் சில காலங்கள் மட்டுமே ஒரு வானொலியில் நிகழ்ச்சி படைத்தது .. குறிப்பிட்ட வானொலியின் ஒட்டுமொத்த நேயர்களின் இதயங்களையும் உன்னருகே நானிருந்தால் மூலம் கொள்ளை கொண்டவர் துஷா மேனன் .

அவரது நிகழ்ச்சி இன்று வரை நேயர்களால் பேசப்பட்டு வருகிறது என்றால் அவரது திறமை தான் காரணம்.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதம் , நேயர்களுடன் அன்பாக பேசி அவர்களது அன்பை பரிசாக பெற்றவர் துஷா.

அவரது புதிய ENTRY தான் தமிழ் FM … நிச்சயமாக அவரது உன்னருகே நானிருந்தால் நேயர்கள் இனி தமிழ் பக்கம் வருவார்கள் என எதிர்ப்பார்க்கலாம்.

அவருக்கு இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.