தொடர்ந்து ஒரு நிறுவனத்தில் 21 வருட காலம் பணிபுரிந்து சாதனை படைப்பது உண்மையில் வரவேற்கத்தக்கது.

அதுவும் வானொலி , தொலைக்காட்சி என மக்கள் விருப்பதிக்கேற்ற விதத்தில் நிகழ்ச்சிகளை படைத்தது அவர்கள் மனதில் இடம் பிடிப்பது சாதாரண விடயமல்ல.

கஜமுகன் இந்த பெயர் எங்கள் காதில் ஒலித்தால் உடனே நினைவுக்கு வருவது சக்தி ஊடகம்.

இப்படி ஒரு சிலருக்கு தனது ஊடக நிறுவனத்தை அடையாளப்படுத்த முடியும்.

ஆனால் 21 வருட தனது சக்தி ஊடக பயணத்தின் இறுதி நாள் இன்று என அவர் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.


பெரும் வியப்பான ஒரு விடயம் என்றாலும் தனது எதிர்கால நலனுக்காக அவரது இந்த மாற்றம் இருக்கலாம் .

எது எப்படியோ மிக சிறந்த ஊடக ஆளுமையை சக்தி இழக்கின்றது…. என்பது மறுக்க முடியாத உண்மை.

அவரது எதிர்காலம் சிறப்புற இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.