கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் மின்னியல் ஊடகரான சொற்கோ .வி .என் . மதியழகன் அவர்களை ஒரு எழுத்தாளராக அங்கீகரித்துள்ளது.
குரலோடு விரலையும் இயங்குதளத்தில் வைத்திருக்கும் சொற்கோ .வி .என் . மதியழகன் அவர்களை இணையத்தின் கணிப்பு இவ்வாறு கூறியிருப்பது அவருக்கு எல்லை கடந்த மகிழ்ச்சியை தந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
1969 முதல் எழுதிவரும் சொற்கோ .வி .என் . மதியழகன் கனேடிய சாதனை எழுத்தாளர்கள் தமது இணையமூலம் முதன் முதலாக தங்களில் ஒருவரென அவரை ஏற்று சம பாக்கியதை வழங்கியுள்ளனர்.
அவர்கள் எல்லோருமே தமது கலைத்துவ செழுமையால் வாசகர்களுக்கு மகிழ்வூட்டும்,உணர்வூட்டும் சிறுகதை,நாவல்,கவிதை என்பவற்றை மனம் அடக்கி அவற்றிற்கு உரிய வரன் முறைப்படி சிரமம் எடுத்துப் படைப்பவர்கள்.
அவை ஆக்க இலக்கியங்கள்.கற்பனைத் திறனுடன் உருவாக்கப்படுபவை.
சொற்கோ .வி .என் . மதியழகன் அவர்கள் கட்டுரைகள்,ஆய்வுகள், விவரணங்கள் அல்லது சித்திரங்கள்,அனுபவ பகிர்தல்கள் ,செய்திகள் ,உரை பெயர்ப்பு என்பவற்றை எனக்கே வாய்த்த ஒலிபரப்பு தமிழ் நடையில் எழுதி வருபவர்.
இவை உரை நடையிலான அறிவு இலக்கியம்.இங்கே கற்பனைத் திறன் தேவையில்லை.
சிரமமும் இல்லை,செய்தி நடையில் சிறுகதைகள் எழுதும் தனித்துவமான எழுத்தாளர்களும் உளர்,அப்படியாக எழுதிப் பார்க்கவேண்டும் என்று அவர் மனம் அவ்வப்போது உந்துவதுண்டு,மூத்த ஊடகவியலாளர் எஸ்.ஜெகதீசன் சிறுகதைகள் எடுத்துக்காட்டாய் உள்ளன,செய்திகளை தமக்கு வாலாயமாக்கி சிறுகதைகள் ஆக்குவதில் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அதி சூரர் என்பது எனது சொந்த அபிப்பிராயம்.
40 ஆண்டுகால இலக்கிய வாழ்வு வாழ்ந்து வந்த ஆக்க இலக்கிய எழுத்தாளர் அகிலன்,
கற்பனைத்திறனோடு எழுதி வந்த யதார்த்த ஆக்க இலக்கிய எழுத்தாளர் ஜெயகாந்தன் போன்ற உன்னதமானவர்களும் உரை நடை இலக்கியமும் எழுதியவர்களே.
இவ்வாறு தனது முகப்புத்தக பக்கத்தில் சொற்கோ .வி .என் . மதியழகன் எழுதியுள்ளார் . தொடர்ந்தும் அவரது பதிவில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
” எழுதுபவர்கள் எல்லோருமே எழுத்தாளர்கள்தான்” என்பார் சிறுகதை எழுத்தாளருமான ஒலிபரப்பாளர் முருகேசு இரவீந்திரன்.
அது சரி ரவி. எவர் என்ன சொன்னாலும் எழுத்தாளர்களை மட்ட்டுக்கட்டி Marks போட்டு pass கொடுப்பவர்களும்,fail கொடுப்பவர்களும் வாசகர்கள்தானே.
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தற்போதய தலைவரும்,சிறுகதை எழுத்தாளரும்,ஊடகருமான ‘ரவி’ ரவி கனகசபை அவர்கள்,செயலாளர் முனைவர் திருமதி.வாசுகி நகுலராஜா அவர்கள்,பொருளாளர் திருமதி.இராச்குமார் குணரத்தினம் ஆகியோர் எழுத்தாளர் அரங்கம் 30 இல் மெய்நிகர் வழியாகத் தோன்றி உரை செய்யுமாறு உள்ளன்போடு கட்டளை போட்டுள்ளார்கள்.
ஏற்றிட்டேன்.
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் முன்னாள் தலைவராக விளங்கி அதை அடுத்த படிநிலைக்கு இட்டுச்சென்ற தற்போதைய நிர்வாகக் குழு உறுப்பினர் கவிஞர்,எழுத்தாளர் ” புலம் பெயர் பாரதி”அகணி சுரேஷ் அவர்கள்
மெய்நிகர் நிகழ்வை நடத்திச் செல்வார்.
நண்பர்களே!
உங்களிடம் ஒரு விண்ணப்பம்.
நீங்கள் இந்த நிகழ்வில் என்னோடு தோன்ற வேண்டும்.கனேடிய எழுத்தாளர்களை சந்திக்க வேண்டும்.அமர்க்களம் செய்திடல் வேண்டும்.
அழைப்பிதழைப் பாருங்கள்.
திகதி,நாள்,நேரத்தை குறித்துக் கொள்ளுங்கள்.
அது ஒரு பேரானந்த நிகழ்வாக அமைந்திடட்டும்.
தலைவர் ரவி கனகசபை அவர்களே! நன்றி,
இலக்கிய சாதனையாளர் அகணி சுரேஷ் அவர்களே! உங்களை எதிர்கொள்ள நான் ready-
தனியாக அல்ல நண்பர்களோடு.அவர்களை பெருமைபட உங்கள் எல்லோருக்கும் நான் அறிமுகம் செய்திட ஆசையுண்டு.
நாமும் இந்த எழுத்தாளர் அரங்கம் 30 இல் மெய்நிகர் வழியாகத் கலந்துகொள்வோமாக
மெய்நிகர் சிறப்பாக நடைபெற இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.