மலரும் மூளாய் அபிவிருத்தி அமையத்தின் தைப் பொங்கல் விழா

மலரும் மூளாய் அபிவிருத்தி அமையத்தினரால் தைப்பொங்கல் விழா வரும் 14ஆம் திகதி மாலை 2.00 மணிக்கு காரைநகர் வீதி மூளாயில் City hall நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் 2024 ஆம்ஆண்டு நடைபெற்ற தேசிய ஆக்த்திறன் போட்டியில் தேசியமட்டத்தில் முதலிடம் பெற்ற ஞானஒளி அறநெறிப்பாடசாலை மூளாய் பண்ணிசை மாணவர்கள் 20 பேர் கௌரவிக்கப்படவுள்ளனர்.

இந் நிகழ்விற்கு ஜீவேஸ்வரன் அம்பிகை தலைமை தாங்குகிறார் .

ஆசியுரையை வதிரன்புலோ சித்திவிநாயகர் தேவஸ்தானம் பிரதம குருபிரம்மஷிறி சி.ஜெயானந்தசர்மா வழங்குகிறார்.

வாழ்த்துரையை திரு ஆசுகவி செ.சிவசுப்பிரமணியம் வழங்குகிறார்.

பிரதமவிருந்தினராக இந்து கலாச்சார மாவட்ட உத்தியோகத்தர் திரு சு.உதயபாலன் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

சிறப்பு விருந்தினராக பாரி அறக்கட்டளையை சேர்ந்த திரு ச.நிகேஸ் கலந்து சிறப்பிக்கவுள்ளார் .

கௌரவ விருந்தினர் திரு ந.சிவரூபன் கிராமஉத்தியோகத்தர் J/171 மூளாய் ஆகும்.

இந்த நிகழ்வில் பலகலை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வின் ஆரம்பத்தில் மாணவர்களும் விருந்தினர்களும் பிள்ளையார் கோவிலிருந்து நாதஸ்வர மேளவாத்தியங்களுடன் அழைத்து வரப்பட்டு காரைநகர் வீதி மூளாயில் City Hall மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!