தனியார் ஊடக கற்கை நிறுவனம் ஒன்றிக்கு எதிராக தேசிய விருது பெற்ற தொலைகாட்சி தயாரிப்பாளர் ஷியா தனது முகப்புத்த்க பதிவின் மூலமாக எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.அவரது பதிவு இதோ
இன்னுமொரு ஊடகப்பயிற்சி நிறுவனமா?
யார்? எதனை? யாருக்கு கற்பிக்கின்றீர்கள்?
நீங்கள் வழங்கும் Diploma சான்றிதழுக்கு அனுமதி வழங்கியது யார்? உங்கள் கற்கை நிறுவனத்தை எங்கே பதிவு செய்து இருக்கின்றீர்கள்? கற்பித்தல் பாட நெறியை அங்கீகரித்தது யார்? கற்கை நெறிகள் எவ்வளவு காலம்?
அந்த காலப்பரப்பில் ஊடகம் சம்பந்தமான என்ன என்ன விடயங்களை கற்றுக்கொடுக்கப் போகின்றீர்கள்? யார் இந்த விடயங்களை கற்பிப்பது? கற்கை நெறிகளின் நடைமுறை செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான வசதிகள் உங்களிடம் இருக்கின்றதா? சரியான வசதியடன் கூடிய வகுப்பறைகள் உள்ளதா?
ஊடகத்தை ஆசையுடன் எதிர்காலமாக கருதும் அப்பாவி மாணவர்களை தயவு செய்து வழி கெடுக்காதீர்கள், உன்னதமான ஊடகத்துறையை வியாபாரம் ஆக்காதீரகள்.
கஷ்டப்பட்டு ஊடகத்துறையில் கால் பதித்து, முறையாக பல ஆசான்களிடம் கண்ணியமாக இந்தத் துறையை கற்று, கடுமையாக இன்னும் உழைப்பவனாக, அந்த வலியை நன்கறிந்தவனாக இந்த வியாபாரத்தை எதிர்த்து நான் போராடுவேன்!!!
ஊடக கற்கை நிறுவனம் என்ற பெயரில் சுத்துமாத்து வியாபாரம் செய்து மாணவர்களையும், விரிவுரையாளர்களையும் ஏமாற்றிக்கொண்டிருக்கும் ஓர் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளேன் என்பதையும் பதிவு செய்ய விரும்புகிறேன்!!!
(அந்த தனியார் நிறுவனத்தின் விளம்பரம் ஷியாவால் இணைக்கப்பட்டு இருந்தது .இருப்பினும் சிறிது நேரத்தின் பின் அது அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது)