பாடல்கள் அதுவும் வீடியோ பாடல்களாக வரும் போது அதற்கு கிடைக்கும் அங்கீகாரம் தனி.
அதுவும் ஏற்கனவே பல தரமான படைப்புக்களை வழங்கிய இயக்குனர் என்றால் சொல்லவா வேண்டும்.
அப்படிப்பட்ட இயக்குனர் தான் ரெஜி செல்வராசா.ரெஜின் இயக்கத்தில் அடுத்து வர போவது வனரோசா.
90 களின் காதல் கதையாம் .சொல்லப்படாத காதல்களையும் கொல்லப்பட்ட காதல்களையும் 90s இல் பிறந்த பிஞ்சுகளின் மன வலிகளையும் சுமந்து வருகிறோம் ..என்று படக்குழுவினர் பதிவுசெய்துள்ளனர்.
வாஹிஷன் ராசையா மற்றும் ஆத்விக் உதயகுமார் மற்றும் திஷோன் ஆகியோரனின் குரல்களுக்கு திஷோன் இசையமைக்க டீம் ராப் சிலோன் பாடலை வழங்குகிறார்கள்.
அல்விஸ் கிளிண்டனின் நடன இயக்கத்தில் , மதுஸ் இன் போஸ்டர் டிசைனில் தேனுஷன் தயாரிக்கும் வனரோசா வருவாளா ……வழி மீது விழி வைத்து