நடிகை செளந்தர்யாவின் கடைசி சில நிமிட வார்த்தைகள்

தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை சௌந்தர்யா. 2004 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்ள ஹெலிகாப்டரில் சென்று இருந்தார். அப் போது திடீரென்று ஏற்பட்ட விபத்தில் சௌந்தர்யா அவர்கள் அநியாயமாக உயிரிழந்தார். அப்போது அவர் இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்தார். இன்று சௌந்தர்யாவின் பிறந்தநாள். அவர் உயிரோடு ரஇருந்து இருந்தால் அவர் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி இருந்திருப்பார்.

இந்த நி லையில் சௌந்த ர்யாவை சினிமாவில் அறிமுகப்படுத்திய வரும் சௌந்தர்யாவின் வா ழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்தவருமான இயக்குனர் ஆர் வி உதயகுமார் அவர்கள் சௌந்தர்யா நினைவு தினத்தை முன்னிட்டு பேட்டி ஒன்றை அளித் திருந்தார். அதி ல் அவர் கூறியது, சௌந் தர்யா மாதிரி ஒரு திறமை யான நடி கையை பார்ப்பது அபூர்வம்.எப்போதுமே சௌந்தர்யா அவர்கள் எந்த படமாக இருந்தாலும் என்னிடம் வந்து கேட்டு பண்ணலாமா வேணாமா என்று கேட்பார்.

ஒரு முறை தெலு ங்கில் வரு டத்திற்கு 10 பட ங்கள் கொ டுத்து இருந்தார் சௌந்தர்யா. அப்போது ரஜினி சாரோட அருணாச்சலம் படத்தில் நடிக்க கால்ஷீட் கே ட்டும் சௌந்தர்யாவால் கொடுக்க முடியாமல் போனது. பின் ரஜினி சார் என்னிடம் கேட்டுக் கொண்டதால் நான் சௌந்தர்யாவிடம் போன் பண்ணி நீ கண்டிப்பாக ரஜினி சார்  படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னேன்.

2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் தேதி என்னுடைய மனைவி சுஜாதாவுக்கு சௌந்தர்யாவிடம் இருந்து போன் வந்தது. சௌந்தர்யா நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொல்லி இருந்தா ர். நான் பிரசாரத்துக்கு போறேன். போய்ட்டு வந்து உங்களை சந்திக்கிறேன் என்று சொல்லி விட்டு போனார்கள்.அடுத்த நாள் ஏ ப்ரல் 16-ஆம் தேதி சௌந்தர்யா எனக்கு போன் பண்ணி சார் உங்களை என் வா ழ்க்கையில் மறக்க மாட்டேன். சினிமாவுல நீங்க எனக்கு கொடுத்த வாய்ப்பு மூலம் இந்த அளவிற்கு உள்ளேன் என்று ரொம்ப நேரம் பேசிக்கொண்டு இருந்தார்.

நான் கூட ஏன்ம்மா, உனக்கு என்னம்மா ஆச்சு? ஏன் இப்படி எல்லாம் பேசுற? என்று நான் கேட்டேன். சௌந்தர்யா ஒன்னும் இல்லை சார் என்று சொல்லி போன் வைத்து விட்டா ர்.ஆனால், அடுத்த நாளே சௌந்தர்யா இறந்து விட்டார் என் ற செய்தி வருகிறது. சத்யராஜ் சார் என்னை வாசலில் பார்த்தவுடனே பதறிப் போய் ஓடி வந்து என் கையை பிடித்துகொண்டு அழுந்தார். ஏன் சார் ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டதற்கு சௌந்தர்யா இறந்துட்டாங்க என்று சொன்னார். சொன்னவுடனே எனக்கு என்ன செய்வதென் று புரியவில்லை . ஒருகணம் ஸ்தம்பித்துப் போய் நின்றேன். இந்த சிறு வயதிலேயே சினிமாவில் கொடிகட்டி பறந்த சௌந்தர்யாவுக்கா இந்த நிலைமை 1993-ம் வரு ஷம் ஏப்ரல் 16-ம் தேதி `பொன்னுமணி’ ரிலீஸாகி செளந்தர்யா புகழ்  கொடிகட்டிப் பறந்தது. 2004-ம் வருஷம் ஏப்ரல் மாசம் 17-ம்தேதி அன்னிக்கு செளந்தர்யா உடம் பில் இருந் து உ யிர் பிரிஞ்சி டுச்சு என் று  கண் கலங் கியபடி கூறினா ர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!