SLT மொபிட்டல் நிறுவனத்தின் “சமூக பொறுப்பு” செயற்திட்டத்தின் கீழ் கொரோன தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட தேவையுடைய குடும்பங்களுக்கான அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு மன்னார் நகர் பிரதேச செயலகம் மற்றும் SLT மொபிட்டல் நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் இடம் பெற்றது.
உதயபுரம்,மற்றும் சிறுதோப்பு பகுதிகளை சேர்ந்த சுமார் 50 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களான மா,சீனி,அரிசி,பருப்பு, உள்ளடங்களான நிவாரண பொதிகள் மேற்படி வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரான்லி டிமேல்,மேலதிக அரசாங்க அதிபர் சிவபாலன் குணபாலன், மன்னார் நகர் பிரதேச செயளாலர் ம.பிரதீப் மன்னார் உதவில் பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராய்சி உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.றொகான் மன்னார் SLT மொபிட்டல் நிறுவன முகாமையாளர் திரு.சதீஸ் ஜெகதீஸன் உதவி பிரதேச முகாமையாளர் திரு.முஹாரிம் SLT RTO திரு.குலாஸ் உட்பட பலரும் கலந்து கொண்டு பாதிக்கப்பட மக்களுக்கான உலர் உணவு பொருட்களை வழங்கி வைத்தனர்.
குறித்த “சமூக பொறுப்பு” செயற்திட்டமானது தொடர்சியாக SLT மொபிட்டல் நிறுவனத்தினால் மாவட்ட ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.