நான் மிகவும் நேசித்த வேலைகளில் தொகுப்பாளர் வேலையும் ஒன்று

பவனீதா லோகநாதன் நாம் அறிந்த சிறந்த இயக்குனர் மற்றும் ஊடகவியலாளர்.

இன்று தனது முகப்புத்தகத்தில் மனம் திறந்து பேசியுள்ளார்

எத்தனையோ விருது வழங்கும் விழாக்களை தொகுத்து வழங்கியிருக்கிறேன். ஆனால் இன்றைய நிகழ்வும் அனுபவமும் முற்றிலும் மாறுபட்டது.

பொதுவாக புடவை அணிவதும் மேக்கப் போட்டுக்கொள்வதும் எனக்கு Uncomfortable உணர்வை தோற்றுவிப்பவை.

ஆனால் புடவை, நகைகள், மேக்கப், பூ என்று அலங்கார பதுமையாகத்தான் ‘தமிழ்’ தொகுப்பாளராக நம் முகத்தை காட்ட வேண்டும் என்று ஒரு எழுதப்படாத விதி இருக்கிறது.‌

எனக்கும் அதுதான் கடைசிவரை வாய்த்தது. மேலை நாடுகளை போல எளிமையான Blazer அல்லது official outfit உடன் இயல்பாக தொகுத்து வழங்கும் வாய்ப்புகள் வராதா என்று கவலையடைந்திருக்கிறேன்.

இருவாரங்களுக்கு முன்னர் Search for commen ground அமைப்பால் அவர்களது விழாவை தொகுத்து வழங்க அழைத்தனர்.

Virtual ஆக நடைபெறவுள்ள நிகழ்வில் விரும்பிய ஆடையில் வரலாம் என்று கூறியபோது என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இன்று தான் அந்த நாள்- மேக்கப், நகைகள் எதுவும் இல்லை. Official Outfit இல் தொகுத்து வழங்க ஆரம்பித்தேன்‌. நேரம் செல்ல செல்ல இத்தனை இயல்பான தொகுப்பாளர் நிமிடங்களை அனுபவித்ததில்லை என்று உணர முடிந்தது.

நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே comment box இல் நேரடி பாராட்டுகள் வாழ்த்துகள் வர தொடங்கின. ஏற்பாட்டு குழுவினரது பாராட்டுகளும் எங்கள் உற்சாகத்தை அதிகரித்தன.

6 மணி நேரமாக சந்தோஷமாக நிகழ்ச்சியை தொடர்ந்தோம். நான் மிகவும் நேசித்த வேலைகளில் தொகுப்பாளர் வேலையும் ஒன்று. அந்தப் பணியிலிருந்து நீங்கி ஒன்றரை வருடத்திற்கு மேலாகிறது. தற்போது அதே வேலையை இங்கு செய்கையில் செயற்கையான உலகத்தில் யாரோ ஒருவரின் கயிறுகளில் சிக்கித்தத்தளித்து நினைவிற்கு வருகிறது.

இந்த Virtual ஊடகம் தொலைக்காட்சியின் போலி கட்டுப்பாடுகளையும் கட்டமைப்புகளையும் தகர்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.‌நம் சுயம் பேண டிஜிட்டல் மாற்றங்களை வரவேற்போம்.இயல்பே அழகு 🎈

நன்றி : Search for Common Ground Sri Lanka

நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!