நாட்டின் இக்கட்டான சூழ்நிலையில், தொழில்வாய்ப்புக்கள் அற்ற நிலையில், பசி பட்டினிகளொடு போராடி அன்றாட உணவிற்கு நெருக்கடிகளைச் சந்தித்துக்கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கான உதவிக்கரம் நீட்ட – திரைத்துறைக் கலைஞர்களாம் நமக்கோர் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.
பிரான்ஸ் தமிழ் திரைக்கலைஞர்கள் மற்றும் ஈழத்தமிழ் திரைக்கலைஞர்களின் இணைவில் தேவையுள்ள மக்களுக்கான உலர் உணவுப்பொதி விநியோகம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
எனவே நம் கலைஞர்களாகிய நீங்கள் வசிக்கும் பகுதிகளுக்குள்ளே (யாழ் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில்) உங்கள் கண்முன்னே தேவையோடு உணவுக்காக சிரமப்படும் குடும்பங்கள் பற்றிய சாியான விபரங்களோடு அவற்றை எமக்கு முகப்புத்தக உள்பெட்டி ஊடாக 18.06.2021 வெள்ளிக்கிழமை மதியம் 1 மணிக்கு முன்னராக அனுப்பிவையுங்கள், அனுப்பும்போது உங்கள் தொடர்பு இலக்கங்களையும் அனுப்ப மறக்க வேண்டாம்.
அத்தோடு சனிக்கிழமை அன்று கொடுக்கவேண்டிய உலர் உணவுகளை பொதி செய்யவேண்டிய தேவை இருப்பதனால் இப்பொதுப்பணியில் ஆர்வமுள்ள கலைஞா்களை – கச்சோி நல்லூர் வீதி பாணன்குளம் அம்மன் கோவிலுக்கு முன் வீதியிலுள்ள ஹிமாலயா நடனப்பள்ளிக்கு வருகைதந்து எம்முடன் பங்குகொள்ள அன்போடு அழைக்கின்றோம்.
குறிப்பு – 20.06.2021 ஞாயிறு அன்று உலர் உணவுப்பொதிகளை அந்தந்த இடங்களுக்கு மொத்தமாக வநியோகம் செய்வதற்கான வாகன வசதிகளை வழங்கக்கூடிய நபர்களிடமிருந்து அவ்வுதவியை அன்போடு எதிர்பார்க்கிறோம்.