FootBallகால்பந்து விளையாடுவது ஜாலி..! அதிலும் மழையில் விளையாடுவது மிக ஜாலி..!அதிலும் சம்பிரதாயமற்ற கரடு முரடான தரையில் Terrain விளையாடி காயமடைவது மிகமிக ஜாலி..!நனைந்த உடைகளை அப்படியே அறையில் கழற்றி போட்டு, சகதி பூட்ஸுடன் வீடு முழுக்க நடந்து அம்மாவிடம் அடி உதை வாங்குவது மிகமிகமிக ஜாலி..! கடைசியில், தலையை துடைத்து விட்டு, அம்மா குடிக்க காப்பி சூடா தரும்போது அதை குடிப்பது மிகமிகமிகமிக ஜாலி..!ஆனால், மிகமிகமிகமிக ஜாலி தர அம்மாதான் இல்லை…! மற்றபடி FootRainBall கால்மழைபந்து ஜாலிதான்..!!!
இந்த பதிவு முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அவர்கள் தனது முகப்புத்தகத்தில் இட்ட பதிவு