இலங்கை வானொலி அறிவிப்பாளர்களில் அனைவருக்கும் நன்கு தெரிந்தவர் லங்கேஷ் எனலாம்.
இலங்கை வானொலி ,சூரியன்,அலை ,தமிழ் , வசந்தம் ,கேபிடல் என சகல வானொலி நேயர்களை கவர்ந்தவர்.
மலையக மக்களின் பிரச்சனைகளை முகப்புத்தகத்தில் வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்களில் லங்கேஷும் ஒருவர்.
கடந்த பல வருடங்களாக ஊடகத்துறையில் பல சாதனைகளை புரிந்த லங்கேஸ் இம்முறை நடைபெறவிருக்கும் பாராளமன்ற தேர்தலில் நுவரெலிய மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.
அனுரா குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் நுவரெலிய மாவட்ட பட்டியலில் கையெழுத்திட்டுள்ளார்.
நிச்சயமாக அவரை இம்முறை பல எதிர்ப்பார்ப்புகளுடன் தேசிய மக்கள் சக்தி காலம் இறக்கியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி எதிர்வரும் பொது தேர்தலுக்காக நுவரெலியா மாவட்டத்திற்கான வேட்புமணுவில் கைச்சாத்திடப்பட்டது.
நுவரெலியா -மஸ்கெலியா தொகுதிக்கான பிரதான தேர்தல் காரியாலய திறப்பு மற்றும் வேட்புமணுவில் கைச்சாத்திடல் குழு தலைவர் மஞ்சுள சுரவீர சகோதரர் தலைமையில் 13-03-2020 திகதி ஹட்டனில் நடைபெற்றது .
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற வேட்பாளராக களமிறங்கும் பிரபல வானொலி அறிவிப்பாளர் ,ஊடகவியலாளர் கந்தையா லங்கேஸ்வரனும் வேட்புமணுவில் கைச்சாத்திட்டார் ,அவருடன் சட்டத்தரணிகள் மற்றும் பல முக்கியஸ்த்தர்களும் வேட்புமணுவில் கைச்சாத்திட்டனர்.
பொதுத் தேர்தலில் போட்டியிடும் கந்தையா லங்கேஸ்வரனுக்கு இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.