இலங்கையில், கடந்த மாதம், ஈஸ்டர் பண்டிகை நாளான, 21ம் தேதியன்று, தேவாலயங்கள், ஓட்டல்கள் என, எட்டு இடங்களில், அடுத்தடுத்து, சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதில், 258 பேர் இறந்தனர்; 500க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.இந்த குண்டு வெடிப்புக்கு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இவ்வாறான ஒரு சூழ் நிலையிலும் ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டு உடனக்குடன் என்ற பெயரில் செய்திகளை அறிவித்தனர்.ஆனால் இன்றுடன் கிட்டத்தட்ட 21 நாட்கள் கடந்துள்ளது .
பாதிக்கப்பட்ட மக்கள் பலர் இருக்கிறார்கள்.இந்த நேரத்தில் மக்களின் மன நிலையை சில ஊடகங்கள் இன்னமும் புரிந்துக்கொள்ள முற்படவில்லை.
இறந்தவர்களையும் உறவுகளை இழந்தவர்களையும் சம்பந்தப்பட்டவர்கள் மறந்துவிட்டார்கள்.நாம் இங்கு யாரையும் விமர்சிக்க தயாரில்லை.
இந்த கொடூர தாக்குதலில் கண் ,கை ,கால் ,விரல் இவற்றுக்கு மேலாக முகத்தின் உருவத்தை கூட இழந்தவர்கள் இருக்கிறார்கள்.இவர்களுக்கு பிளாஸ்டி சத்திர சிகிச்சை மூலம் மருத்துவ உதவி வழங்க அரசு முன்வந்தாலும் அதற்கான வசதிகள் நம்மிடம் இல்லை என்கிறது அரச மருத்துவமனைகள்.
இதற்கு ஊடகங்களால் என்ன செய்ய முடியும் என்று நீங்கள் கேட்கலாம்.முடியும் சுனாமி அனர்த்தம் ,வெள்ள அனர்த்தம் இவற்றின் போது ஊடகங்கள் தனி தனியே உலர் உணவு பொருட்கள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை சேகரித்து மக்களிடம் இதே ஊடகங்கள் தான் கொண்டு போய் சேர்த்து.
அப்படி இருக்கும் போது ஏன் குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முடியாது.நாங்கள் ஊடகங்களை ஒன்று சேர சொல்லவில்லை தனி தனியாக சேருங்கள்.பாதிக்கப்பட்ட தேவாலயங்களுக்கு சென்று பித்தவாயு சந்தியுங்கள்.அவர்களிடம் இருக்கிறது காயப்பட்டு சிகிச்சை பெரும் மக்களின் விபரங்கள்.
இவற்றை தினமும் உங்கள் ஊடகங்களில் காட்டுங்கள்.ஆனால் வெடிப்பு நடந்த தினத்தில் பெறப்பட்ட காட்சிகளை மற்றும் அடிக்கடி காட்டாதீர்கள்.வயதாகி நோய்வாய் பட்டு உயிர் பிரிந்து எமது உறவினர்களின் படங்களை பார்க்கும் போது நமக்கு ஏற்படும் வலி இருக்கிறது அல்லவா..அதைவிட கொடுமையானது இந்த குண்டு வெடிப்பு காட்சிகளை ஊடகங்கள் அடிக்கடி காட்சிப்படுத்துவது.
எனவே இனி செய்ய வேண்டியது சம்பவத்தில் காயப்பட்டவர்களுக்கும் ,சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கும் உதவி செய்வது தான்.முயற்சி செய்யுங்கள் உங்களால் முடியும்.