சக்திக்கு எதிரான சமூக வலைத்தள பதிவுகளுக்கு இவர்கள் தான் காரணமா?

சக்திக்கு எதிரான சில பதிவுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.இது சாதாரண விடயமல்ல.இதை இப்படியே விடவும் முடியாது.இதை நாமே அலசி ஆராய வேண்டும்.

சக்தி என்பது இன்று நேற்றல்ல பல வருட காலமாக மக்களுடன் பின்னி பிணைந்த ஒரு ஊடகம்.மக்கள் இடர்களில் சிக்கிய போது குரல் கொடுப்பவர்கள் சக்தி குழுவினர்.

ஆனால் இந்த குண்டுத்தாக்குதலுக்கு பிறகு சக்தியின் நியூஸ் பெஸ்ட் செய்திகல் தொடர்பாக சிலர் தவறான கருத்துக்களை பதிவு செய்து வருவதாக சகதி செய்திகளின் ஊடாக MBC நிறுவனம் தெரிவிக்கிறது.

உண்மையில் இவர்கள் பொய் செய்தியை பரப்பி வருவதாக கூறுவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.காரணம் இலங்கையில் நடக்கும் முக்கிய விடயங்களை மூன்று மொழிகளிலும் உடனுக்குடன் சக்தி நிறுவனம் தருகிறது.பிறகெப்படி அது பொய்யாகும்.

சக்தி மீதான இந்த சேறுபூசலின் பின்னணியில் அரசியல்வாதிகள் இருப்பதாகவும் அந்த அரசியல்வாதிகள் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்றும் சக்தி தனது செய்தி அறிக்கையினூடாக கூறுகிறது.அவர்கள் யாரென்று விரைவில் அம்பலப்படுத்துமாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!