நன்றி கெட்ட மனிதர்கள் ….. அறிந்துகொண்ட
இலங்கை இலக்கிய வள்ளல் ஹாஷிம் ஒமர்

ஹாசிம் உமர் இந்த பெயரை உச்சரிக்காத இலங்கை கலை உலகத்தினர் இல்லை .

எத்தனை வருடங்களாக தமிழ் இலக்கிய உலகிற்கு தனது முழு பங்களிப்பை செய்து வருகிறார் .

1190 எழுத்தாளர்களின் முதற் பிரதியை பெற்று அவர்களை ஊக்கப்படுத்தி இருக்கிறார் .

40 க்கு மேற்றப்பட்ட நூல்களை வெளியிட அனுசரணை வழங்கி அவற்றை பிரசுரித்திருக்கிறார் .

இவை அனைத்தும் நடித்திய ஹாசிம் உமருக்கு அண்மையில் நடந்த நிகழ்வு நல்ல பாடத்தை கற்று தந்துள்ளது .

தனது நிகழ்வுக்கு வராத நூல் ஆசிரியர்களை நன்றி கெட்ட தனத்தின் உச்ச கட்டம் என்று பகிரங்கமாக விவரித்துள்ளார் .


#நன்றி கெட்டவர்கள்….!

இது தொடர்பாக இலக்கியவாதி பாமூடின் மாலிக் இவ்வாறு பதிவிட்டுள்ளார்….

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்
உய்வில்லை – செய்ந்நன்றி கொன்ற மகற்கு “….

புரவலர் ஹாசீம் #உமர் , தனது முகநூல் பக்கத்தில் இங்குள்ளதை (படத்தில் உள்ளது) குறிப்பிட்டுள்ளார்.. அவரது தாங்கொனா துயரத்தின் வெளிப்பாடுதான் அவரின் – இந்த சிறு குறிப்பு.

உண்மையில் – ஹாசீம் உமரின் முகநூலில் – அவரிட்ட பதிவை அவதானித்த போது கவலையை விட ஆத்திரமும் ஆவேசமுமே மேலோங்கியது.

‘நன்றி கெட்டவர்கள்’ – என்று தலைப்பிட்டதும் அதனால்தான்.

தங்களைப் #பிரபலமாக்கிக்கொள்ள புரவலரை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது வெளிப்படையான உண்மை.

புரவலரின் பதிவின் படி சுமார் 1230 முதற் பிரதிகளை நாடு முழுவதும் பெற்றுள்ளார். ( 40 நூல்களை தனது சொந்த செலவில் அச்சிட்டு வழங்கியது உட்பட )

முதற் பிரதி பெறும்போது #அன்பளிப்பாக சிறு தொகையொன்றை வழங்குவது என்பது பண்பு . அவ்வாறு பார்க்கும் போது ஒரு முதற்பிரதிக்கு அண்ணளவாக 10,000 ரூபா என்று எடுத்துக் கொண்டாலும் 1230 பிரதிகளுக்கும் ஒரு கோடி 23 இலட்சம் ரூபா – அவரது சொந்தப் பணம் செலவிடப்பட்டுள்ளது.

நான் அறிந்தவரை – புரவலர் ஹாசீம் உமர் 10,000 ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையையே அன்பளிப்பாக வழங்கி வந்திருக்கிறார். அதன்படி இதுவரை சுமார் 2 அல்லது 3 கோடி #ரூபாவை அவர் செலவிட்டுள்ளார் முதற் பிரதிக்காக…

எழுத்தாளர்கள் , #கலைஞர்கள் மற்றும் #ஊடகவியலாளர்கள் மீது அளவு கடந்த பாசம் கொண்டவர் புரவலர்.

தாயொருவர் – குழந்தை ஒன்றை பிரசவிப்பதற்கு ஈடானது , எழுத்தாளர் ஒருவர் தனது நூலை வெளிக்கொணர்வது என்பது.
ஆக, அவர்களின் கனவு #மழுங்கடிக்கப்படாமல் ; அவர்களின் கனவு நனவாக வேண்டும் என்ற உயரிய எண்ணத்துடனேயே – இவ்வாறு முதற்பிரதிகளை பெற்று அவ்வாறானோரை #ஊக்கப்படுத்தி வருகின்றார் ; வந்திருக்கின்றார்.

இதனால் – புரவலர் ஹாசீம் உமருக்கு கிடைத்த #நண்மை என்ன என்று பார்த்தால் ஒன்றுமில்லை. மாறாக துரோகமும் நன்றிகெட்டதனமுமே எஞ்சியது.

ஒரு படைப்பாளிக்கு கிடைக்க வேண்டிய மரியாதையை போல் தான் அந்த படைப்பை வெளியிடும் அனுசரணையாளருக்கும் வழங்க வேண்டும் .

ஒட்டு மொத்த கலை உலகத்தினர் சார்பில் லங்காடாக்கிஸ் ஹாசிம் உமர் அவர்களிடம் கை கூப்பி மன்னிப்பு கேட்கிறது .

அவரது பதிவிற்கு வந்த பின்னுட்டல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!