நீங்களும் RJ/VJ ஆக வேண்டுமா? | முதலில் இதை செய்யாதீர்கள்

நாடறிந்த RJ ஆக வேண்டும், ஒரு post க்கு 500 likes வரும் VJ ஆக வேண்டும் இப்படி பல கனவுகள் நம்மில் பலருக்கு உள்ளது.

இப்படி கனவு காண்பவர்களை சிக்க வைக்க இன்னுமொரு குழுவும் உண்டு.

இவர்கள் நமது செய்தியின் தலைப்பின் சொந்தக்காரர்கள்.

சிலர் இவர்களை சிக்க வைக்க பல மந்திர தந்திர வார்த்தைகளை பாவித்து தங்கள் வளைக்குள் சிக்க வைத்துவிடுவார்கள்.

நண்பர்களே இலங்கை வானொலிகளில் அறிவிப்பாளராக வேண்டும் என்றால் முதலில் நீங்கள் இலங்கையில் உள்ள தமிழ் வானொலிகளை கேட்க வேண்டும்.

எந்த வானொலியை கேட்க சொல்றிங்க என்ற கேள்விக்கு எம்மிடம் பதில் இல்லை.

இலங்கையில் உள்ள தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் VJ ஆக வேண்டும் என்றால் இலங்கையில் உள்ள
தமிழ் தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டும்.

இதற்கும் அதே பதில் தான். எந்த தொலைக்காட்சி என்றால் எம்மால் கூற முடியாது.

நீங்கள் இந்த துறைக்கு ஏன் வரவேண்டும் என்பதை முதலில் உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

ஆனால் ஒன்று அந்த அண்ணாவை போல் வர வேண்டும்,இந்த அக்காவை போல் வர வேண்டும் போன்ற எண்ணங்களை முற்றாக மறந்துவிடுங்கள்.

அந்த அண்ணா,இந்த அக்கா என்று அவர்களை பின் தொடர பிறகு அவர்கள் மொழி நடை தான் வரும்.

அந்த மீடியா College ,இந்த Institute என்று ஆயிரம் இருக்கும் நிலையில் எதில் சேர்ந்தால் உடனே பிரபலமாகலாம் என்று குழம்பி போய் இருப்பீர்கள்.

நன்றாக யோசித்த பிறகு ஒரு தீர்மானத்திற்கு வாருங்கள்.

உங்கள் குரல் வானொலியில் நிச்சயமாக ஒரு நாள் கேட்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!