கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் நாளை முதல் அரச மற்றும் தனியார் நிறுவனங்களை திறந்து மக்களின் பொது அன்றாட வாழ்க்கையை வழமைக்கு கொண்டு வர அரசு தீர்மானித்துள்ளது.
அந்த வகையில் நாளை திறந்து வியாபாரம் நடத்த கூடிய வியாபார நிலையங்கள் இவை தான்.
அத்தியாவசிய பொருட்களுக்கான மொத்த மற்றும் சில்லறை கடைகள்
மருந்தகம் ,கோரோசரி ,தொலைபேசி விற்பனை நிலையங்கள் ,புடவை கடைகள் ,பத்திரிகை மற்றும் புத்தக நிலையங்கள் ,லொத்தர் நிலையங்கள் போன்றவை சுகாதார விதிமுறைகளுக்கமைய திறந்து வியாபாரம் நடத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல் உபர் மற்றும் PIKME காரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சந்தை ,கிழமை சந்தை ,பொது சந்தை ஆகிய திறக்கப்பட அனுமதியில்லை.
உடற்பயிற்சி GYM நிலையங்கள் திறக்க அனுமதி இல்லை.
பேட்டிங் சென்டர் ,SPA மற்றும் இரவு கிளப் போன்றவை திறக்க அனுமதியில்லை.
ஹோட்டல் ,பெட்டிக்கடை ,சிறிய தேநீர் கடைகள் ,போன்றவை திறக்க அனுமதியில்லை.
எனவே மேற் குறிப்பிட்ட விடயங்கள் போலீஸ் ஊடக பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.