உளி படாத கல் சிலை ஆவதில்லை அதுபோல் உழைப்பில்லாத கனவு நனவாவதில்லை அந்த வகையில் திருகோணமலை மாவட்டம் அதிலும் மட்டக்களப்பு திருகோணமலை எல்லைகளாக இருக்கும் வெருகல் பிரதேசத்தில் ஒரு குக்கிராமம் ஆன கருக்கா முனையில் வசிக்கும் ஏழை-எளிய இளைஞனொருவன் கலைஞனாக துடிக்க ஆர்வப் பட்ட ஒருவன் உருவாக்கிய முதல் குறுந்திரைப்படம் இந்த மரை புதிர் உலகத்தில் நடக்கும் வியப்பான சில விடயங்களை உள்ளடக்கி எடுக்கப்பட்ட ஒரு விஞ்ஞான தொழில்நுட்ப ரீதியான கதையிது ஒரு மனிதன் மறைந்திருந்து மக்களோடு மக்களாக எப்படி மக்களுக்கும் சமூகத்துக்கும் இந்த உலகிற்கும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது தொடர்பான குறும்படமே இது இது முதல் பாகம் ஆகும் இரண்டாம் பாகம் மிக விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.
முதல் பாகத்தில் குறிப்பிட்ட சில விடயங்களை முன்வைத்திருக்கிறார்கள் சமூகத்தில் அவர்களுக்கு பிடித்த செயல்களை செய்ய முடியாது மற்றவரின் தூண்டுதலால் தான் நாம் செய்கின்றோம் மற்றவரின் தூண்டுதலால் தான் நாம் கல்விகற்று வருகின்றோம் என்பதையும் இக் குறும்படத்தில் ஒரு கதை அடிப்படையில் கூறியிருக்கிறார்கள்.
மனிதன் மறைந்திருந்து உயிர் வாழக்கூடிய மாதிரியான ஒரு தொழில்நுட்பம் அந்த தொழில்நுட்பத்தில் சமூகத்துக்கு மனிதனுக்கும் இந்த உலகிற்கும் என்ன மாதிரியான தாக்கங்கள் ஏற்படும் இந்த சமூகத்தில் இந்தத் துறையில் மட்டுமே வளரமுடியும் இந்தத் துறையில் மட்டுமே நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என சில குறிப்பிட்ட படித்த வர்க்கங்கள் அத்துறையை தேர்ந்தெடுக்க விருப்பமில்லாத மாணவர்களை ஊக்கப்படுத்தி அத்துறையில் அவர்களை தோல்வி அடையச் செய்து அவர்களுக்கு பிடித்த ஒரு துறையை தேர்ந்தெடுக்க விடாது நிர்ப்பந்திக்கும்.
ஒரு சமுதாய சூழ்நிலையைஇப்போது நடைபெற்று வருகின்றது இவ் அடிப்படையிலேயே இந்த கதையும் நகர்ந்து கொண்டு செல்கிறது மாணவர்களுக்கு அவரவர் விருப்பப்பட்ட துறையை தேர்ந்தெடுப்பதற்கும் அத் துறையைப் படித்து முன்னேறுவதற்கும் நாம் அனைவரும் ஊக்கப்படுத்த வேண்டும் அவர்களை அவர்களின் விருப்பப்படியே நாம் வெளியில் கொண்டு வருவதற்கு ஆர்வப் படுத்த வேண்டும் என்பதனையும் இக்கதையில் வலுவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
திகில் நிறைந்த திரைப்படம் என்பதால் திகில் நிறைந்த காட்சிகள் முதற்கட்டத்தில் காட்டப்பட்டுள்ளது இப்படத்தின் இரண்டாம் கட்டத்தில் மறை புதிர் படத்திற்கான கதைக்கரு வெளிப்படுத்தபடும் என்பதனையும் குறிப்பிடுகின்றோம் முற்றுமுழுதாக வெருகல் பிரதேசத்தின் கருக்காமுனை இளைஞனான யனாமோகேந்தரன் இயக்கத்தில் அவர்களுடைய பிரதேசத்தைச் சார்ந்த பாடசாலை பழைய மாணவர்கள் ஆசிரியர்கள் இணைந்து உருவாக்கி ஒரு திரைப்படம் இவ் மறைபுதிர் திரைப்படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் அப் பிரதேசத்தைச் சேர்ந்த மேடை நாடகக் கலைஞர்களை முதல் முதலாக திரையில் காட்டியுள்ளார்கள்.
வெருகல் பிரதேசத்தில் உருவாக்கிய முதல் விஞ்ஞான தொழில்நுட்ப ரீதியான ஒரு குறுந்திரைப்படம் இதுவே கிராமத்து இளைஞர்கள் இவ்வாறான தொழில்நுட்ப விடயங்கள் செய்ய எடுப்பது என்பது முடியாத காரியம் அதனால் விவசாயம் தொடர்பான கதைகளை செய்யுங்கள் என்று கூறி இக்கதையை எடுக்க வேண்டாம் பலர் ஊக்கப்படுத்த மறுத்தார்கள் அதன் அங்கமாக முயற்சியும் பயிற்சியும் தொடர்ச்சியாக இருந்தால் சாதாரண மனிதனும் சாதனையாளன் ஆகலாம் என்பதனை இக் குறும்படத்தின் கலைஞர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.
ஆகவே திருகோணமலை மட்டக்களப்பு மாவட்ட கலைஞர்களின் உதவியோடு யனாமோகேந்தரனின் என்ற இளைஞன் விஞ்ஞான தொழில்நுட்பம் ரீதியான என்ற விடயத்தை வெளிக்கொண்டு வருவதற்காக பாடுபட்டு இருக்கிறார்கள்.
ஒரு குக்கிராமத்தில் இளைஞன் எந்த ஒரு தொழில்நுட்ப வசதிகள் இல்லாமல் இத்திரைப்படத்தை முதன்முதலாக எடுத்திருப்பது பாராட்டத்தக்க விடயம் B. கௌரி தாசன் அவர்களின் தயாரிப்பில் இப்படம் வெளிவந்தது மிகவும் பெருமைக்குரிய விடயமாகும் மிகுந்த பணத்தட்டுப்பாடு நேரத்தில் கிராமத்து இளைஞர்களின் கலை ஆர்வத்தை வெளியுலகிற்கு கொண்டு வருவதற்காக B.கௌரி தாசன் அவர்கள் தனது ஆதரவை அளித்து தனது தயாரிப்பில் இத்திரைப்படத்தை வெளிக்கொண்டு வந்தது மிகவும் பெருமைக்குரிய விடயம்.
முற்றுமுழுதாக அனைவரும் பார்க்கக்கூடிய ஒரு நல்ல குறும்படம் முதன்முதலாக பின்னணி குரல் பதிவு செய்த ஒலியை வைத்துக்கொண்டு ஒலிக்கு ஏற்றவாறு படமாக காட்டப்பட்டுள்ளது இதுவே முதல்தடவை.
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு கலைஞர்களின் சங்கமத்தில் “வெருகல்” என்ற அந்த சின்னம் சிறிய பாரம்பரியக் கிராமத்தில் இருந்து வெளிவரும் முதல் குறும்படம் “மறை புதிர்”இன்று வியாழக்கிழமை மே 7ம் திகதி புலம்பெயர் தேசங்களில் தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற நம் கனடிய மண்ணில் ”Montamil” மற்றும் ”Eyetamil” ஊடகங்கள் இணைந்து, கனடிய நேரம் மாலை 6.00 மணிக்கு IPTV & YouTube ஊடாக வெளியீடு செய்ய இருக்கிறார்கள்.
அவர்களது இந்தக் கன்னி முயற்சிக்கு பலர் தங்கள் ஆதரவை வழங்கி வருகிறார்கள்.படக்குழுவினர் அனைவருக்கும் திருமலை ஒன்றியம் மற்றும் நியூஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்து இப்படிப்பட்ட வாழ்த்துக்கள் வந்து குவிகிறது.
இலங்கை ரசிகர்களுக்காக “மறைப்புதிர்” குறும்படம் Ranjanas Cine Magic யூடியூபில் வரும் சனிக்கிழமை மாலை 4.15 மணிக்கு “மறைபுதிர்” குறும்படம் பார்க்கலாம். அதிகாரப்பூர்வ யூடியூப் வழியாக சேனலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் :- https://www.youtube.com/channel/UCI0HwGLK9tEWKbqzCBrl68g
படக்குழுவினருக்கு இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான lankatalkies இன் வாழ்த்துக்கள்.