நமது நாட்டில் பாடகர்களுக்கு ஒரு மரியாதை உண்டு.அந்த மரியாதை என்பது அவர்கள் வெளியிடும் படைப்பில் தான் தங்கியுள்ளது.
அவர்களுக்கு கெளரவம் தரும் அந்த படைப்பில் மற்றவர்களின் பெயரை களங்கப்படுத்த நினைப்பது மிகவும் வெறுப்பான செயல்.
அதுவும் தனது சுய வருமானம் சமூக வலைத்தளங்களில் இருந்த கிடைக்கும் என்ற பேராசையில் இவர்கள் செயற்படுவது வெட்கமான விடயம்.
அதை தான் பாடகர் இராஜ் செய்துள்ளார்.அபி UNP என்ற பாடலின் மூலமாக இதுவரை 1 .3 மில்லியன் பார்வையாளர்களை பார்க்க வைத்த இராஜ் இந்த பாடலின் இறுதியில் யாழில் அரசியல் நடத்தும் முக்கிய அமைச்சர் ஒருவரின் தொலைபேசி அழைப்பு வருவது போல் சித்தரித்துள்ளார்.
அந்த பெண் அரசியல்வாதியின் கெளரவம் இதன் மூலம் பாதிக்கப்படும் என்று இவரை போன்ற பாடகர்கள் உணரவில்லையா?
சிந்தியுங்கள் அடுத்தவர்களை மகிழ்ச்சிப்படுத்த ஒரு பெண் அதுவும் ஒரு மக்கள் பிரிதிநிதியை களங்கப்படுத்துவதா?
இது தான் உங்கள் வித்தியாசமான முயற்சியா?.இலங்கை படைப்பாளர்களை ஊக்கப்படுத்தும் எமக்கு இதை ஒரு படைப்பாகவே பார்க்கமுடியவில்லை.
நிறுத்துங்கள் உங்கள் வருமானத்திற்காக சமூகத்தில் கெளரவமாக வாழும் பிரபலங்களை அவமானப்படுத்தாதீர்கள்