22 வது றைகம் விருது நிகழ்வு சனிக்கிழமை சங்கரிலா ஹோட்டலில் இடம் பெற்றது
இதில் சிங்கள தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நாடகங்கள் , ரியாலிட்டி , செய்தி சிறுவர் நிகழ்ச்சியென பல விருதுகள் வழங்கப்பட்ட போதும் தமிழ் மொழிக்கு 2 விருதுகள் மட்டுமே வழங்கப்பட்டது
சிறந்த தமிழ் நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான விருது நேத்ரா டீவியை சேர்ந்த கோகுல் நிரஞ்சனுக்கு வழங்கப்பட்டது. இந்த பிரிவுக்கான பரிந்துரையில் மறைந்த தினேஷ் சுந்தர் பெயர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
சிறந்த தமிழ் செய்தி வாசிப்பாளருக்கான விருது சக்தி டீவியை சேர்ந்த தனுஷியா ஞானசேகரனுக்கு வழங்கப்பட்டது.
இவர்கள் இருவருமே இதே பிரிவில் வெவேறு விருது விழாக்களில் விருதுகள் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இருவருக்கும் இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.
இது இவ்வாறிருக்கு ஊடகவியலாளர் சமித் செனவிரதன தனக்கு கிடைத்த விருதை நிராகரித்து மேடையில் வாங்கிய விருதை திருப்பி கொடுத்தார் .

நடுவார்களது தீர்ப்பில் திருப்தி அடையவில்லை என அவர் ஏற்பாட்டு குழுவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
