கழிவு நீர் கால்வாய் – சீர் செய்யும் பணிகள்

கொழும்பு 15 சாந்த ஜேம்ஸ் வீதியில் (St james Street ) மிக நீண்ட காலமாக சீர் செய்யப்படாமல்யிருந்த பாதையின் கழிவு நீர் கால்வாய் பகுதி கடந்த வாரம் சீர் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

மந்தகதியில் நடைபெறும் சீர் திருத்த பணிகள் மற்றும் முற்று முழுவதுமாக போக்குவரத்திற்கு பாதை மூடப்பட்டுள்ளதால் அப் பகுதியில் உள்ள வர்த்தக ஸ்தாபனங்களுக்கு மிகவும் பாதிப்பு ஏற்படுவதாக கிடைக்க பெற்ற முறைப்பாடிற்கமையை எமது மாநகர சபை உறுப்பினர் திரு. பழ. புஷ்பநாதன் அவர்கள் நேற்றைய தினம் குறிப்பிட்ட பகுதிக்கு விஜயம் செய்து பார்வையிட்டதுடன் சம்பந்தப்பட்ட பொறியியளாளருடன் கலந்துரையாடி பாதையின் ஒரு பகுதியை போக்குவரத்திற்கு திறந்து விடும்படி வேண்டுகோள்விடுத்தார்.

இது சம்பந்தமாக கொழும்பு மாநகர முதல்வர் அவர்களுக்கு அறிவிப்பதாகவும் இன்னும் ஓரிரு தினங்களில் பாதையின் ஒரு பகுதி போக்குவரத்திற்கு திறக்க ஆவணை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

செயலாளர்
துரை. ராஜரட்ணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!