Laughing Raavana Production தயாரிப்பில் ஜதுர்ஷன் சிவாவின் கதை, திரைக்கதை, வசனம் இயக்கத்தில் உருவான SMILEY திரில்லர் குறுந்திரைப்படமானது கடந்த மாதம் YouTube சமூக வலைத்தளத்தில் வெளியாகி பார்வையாளர் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இக் குறுந்திரைப்படத்தில் நடிகர்களாக நிவேதிகன், பிரசன்னா, கஜானன், இசை ரெக்சி பிரின்ஸ், ஒளிப்பதிவு -ஆர்.எஸ்.ரமணி. படத்தொகுப்பு – குரு ரிகே. கலை இயக்குநர் -வி.எஸ்.சிந்து, கலை இயக்கக் குழு – சரண் சங்கர். புவிராஜ். ஒளியமைப்பு ஷியாந். சுஜன், வடிவமைப்பு – ஜதுர்ஷன் சிவா என பலரும் பணியாற்றியுள்ளனர். இத் திரைப் படைப்பை Laughing Raavana என்ற YouTube பக்கத்தில் பார்வையிட முடியும்.
