உங்களை உற்சாகப்படுத்திய தினகரனுக்கு நன்றி கூற பொங்கல் விழாவிற்கு வாருங்கள்

”பொங்கல் விழா என்பது நன்றி உணர்வோடு செய்யப்படும் விழா. தினகரன், தினகரன் வாரமஞ்சரி கலைஞர்களுக்கும் கவிஞர்களுக்கும் ஆற்றி வரும் சேவைகளைப் போற்றி இது தினகரனின் பொங்கல் விழாவாக நடத்தப்படுகிறது ”என்று ஈஸ்வரலிங்கம் தெரிவித்துள்ளார்

இதில் அழைப்பு இல்லாமல் எவரும் கலந்து கொள்ளலாம் என்பதால் தினகரன் மீது நன்றி உணர்வு உள்ளவர்கள் எவராக இருந்தாலும் நிச்சயமாக கலந்து கொள்வார்கள்.

தங்களது செய்திகளையும் ஆக்கங்களையும் படங்களையும் பிரசுரித்து உங்களை உற்சாகப்படுத்தி வரும் தினகரனைப் போற்றி நடத்தப்படும் விழா என்பதால் நீங்கள் செய்ய வேண்டியது எது என்று நாம் மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியதில்லை .

2025.01.26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த மாபெரும் பொங்கல் விழாவில் கலந்து கொள்வது மட்டும் தான்.

எங்கே உங்கள் நன்றி உணர்வை தமிழ் உணர்வை உலகுக்கு பறைசாற்ற ஒரு சந்தர்ப்பம். ஒரு தலைசிறந்த பத்திரிகை எனற விருதை தினகரன் பெற்று இருக்கிறது.

தினகரன் உங்கள் பத்திரிகை. இதனால் தினகரனின் பொங்கல் விழாவை வாசகர்களாகிய உங்களை விட்டு விட்டு நாம் தனியாக கொண்டாடுவது சிறப்பு இல்லை அல்லவா… என்றும் அவர் தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

பொங்கல் விழா சிறப்பாக நடைபெற இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!