இலங்கை தமிழ் தமிழ் இசை கலைஞர்கள் சங்கம் தனது முதலாவது கூட்டத்தை அண்மையில் நடத்தியது.
இதில் இலங்கையில் அதுவும் கொழும்பில் வசிக்க கூடிய இசை கலைஞர்கள் ,ஊடக பிரமுகர்கள் ,நலன் விரும்பிகள் என பலர் கலந்துகொண்டனர்.
அமைப்பின் தலைவராக பாடகர் மஹிந்தகுமாரும் ,செயலாளராக ரத்னம் ரத்னதுரையும்,பொருளாலராக மோகன ரூபனும் ,உபத்தலைவராக செந்தூரனும் தெரிவாகினார்கள் .
ஆலோசகர்களாக அறிவிப்பாளர் சீதாராமன் ,பாடகர் முத்தழகு ,சித்தாரா சந்திரசேகர் மற்றும் இலங்கையின் தலைச்சிறந்த தொலைக்காட்சி தயாரிப்பாளரும் இயக்குனருமான ஷியாவும் இவ் அமைப்பின் ஆலோசகர்களாக இருப்பது குறிப்பிடதக்கது.
இக் கூட்டம் தமிழ் இசை கலைஞர்கள் தங்களது வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக தங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும் .
அதே நேரம் இலங்கை பூராகவும் உள்ள தமிழ் இசை கலைஞர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பயணிக்க கூடிய அமைப்பாக இருந்தால் மிகவும் சிறப்பு .
அமைப்பின் சகல செயற்பாடுகளும் வெற்றி பெற www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.