கடந்த வருடத்தில் சர்வதேச வெசாக் தினத்தையொட்டி ஐக்கிய நாடுகள் சபை மற்றும் புத்தசாசன அமைச்சினால் நடாத்தப்பட்ட அதிகாரபூர்வ சின்னத்தை வடிவமைக்கும்; (டிசைனிங்) திறந்தபோட்டியில் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தை பெற்று வெற்றியடைந்த பசறை யுனிக்வே நிறுவனத்தின் உரிமையாளர் சுப்பிரமணியம் துஷாந்த் அவர்களையும் அவர் வடிவமைத்த சின்னத்தையும் படத்தில் காணலாம்.
இவருக்கு பரிசாக ரூ.25000 பெறுமதியான காசோலையும் சான்றிதழும் கௌரவ.புத்தசாசன அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா அவர்கள் தலைமையில் குருணாகல், பிங்கிரிய தேவகிரி ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இவர்பசறை தமிழ் தேசிய கல்லூரியில் தரம் 8ல் கல்வி பயிலும் போது சக்தியின் மகிமை என்ற நவராத்திரி பூஜை தொடர்பான நூல் ஒன்றை வெளியிட்டதுடன், பதுளை சரஸ்வதி மத்திய கல்லூரியில் உயர்தர கணிதப்பிரிவில் பயிலும்போது தன்னியக்க தீயணைப்பான் ஒன்றை அமைத்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் சினிமா மீது கொண்டிருந்த ஆர்வத்தினால் தான் எழுதிய கதைக்கு தென்னிந்தியாவில் வாய்ப்புக்கள் வந்தபோது அங்கு செல்வதற்காக தனது உயர் படிப்பையும் இடைநிறுத்திவிட்டு 2 மாத காலங்கள் சினிமா மற்றும் குரல் மாற்றம் (Dubbing) தொடர்பான பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்க விடயங்களுல் ஒன்றாகும்.
துஷாந்த் தனது எதிர்கால வெற்றிகள் பல அடைய www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.