அண்மையில் தீக்காயங்களுடன் மரணமான 15 வயதான சிறுமியின் மரணம் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணைகள் இடம்பெற்று, உண்மைத்தன்மை கண்டறியப்பட வேண்டும்.
18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தொழிலுக்கு அனுப்பும் பெற்றோர்கள், முகவர்கள் மற்றும் தொழிலுக்கு அமர்த்துபவர்கள் பாராபட்சம் இன்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும்.
மேலும் துஷ்பிரயோகளுக்கு உள்ளாகும் குழந்தைகளின் வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனைகள் காலம் தாழ்த்தாமல் வழங்குவதற்கு சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.
சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துதல், சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுப்போம்!உமாச்சந்திரா பிரகாஷ் பிரதிச் செயலாளர் ஐக்கிய மக்கள் சக்தி