ரணில் விக்கிரமசிங்க ஒரு சிரேஷ்ட அரசியல் வாதி. சில வருடங்கள் பிரதமர். பல வருடங்கள் எதிர்கட்சி தலைவர்.
ஆகவே அவர் மீண்டும் பாராளுமன்றம் வருவதால், அது ஒரு “சென்சேஷனல் நிவ்ஸ்”. அவ்வளவுதான். அதைவிட, அவர் வந்து சஜித்தை வீழ்த்தி, எதிர்கட்சி தலைவர் ஆவது என்பதெல்லாம், வெறும் “மீடியா ஹைப்ஸ்”தான். அதெல்லாம் ஆகப்போவதில்லை.
இன்றைய ராஜபக்ச இனவாத அரசுக்கு மாற்றாக, சஜித் தலைமையிலான மாற்று கூட்டணி அரசாங்கத்தை அமைக்க, அவர் தனது எஞ்சியுள்ள தகைமைகள் மூலம் வேண்டுமானால் பங்களிக்கலாம்.
பங்களிக்க வேண்டுமென விரும்புகிறேன்.2009ல் யுத்தம் முடிந்து, 15 ஆண்டுகளுக்கு பிறகு 4ம் முறையாக வரும் ஆட்சி மாற்றத்தை, தேசிய மாற்றாக, தமிழ், முஸ்லிம் மக்கள் சார்பாக நம் அரசியலர் மிக கவனமாக கையாள வேண்டும் என்பதே என் கடைசி அவா..!
இன்று தனது முகப்புத்தக பதிவில் தெரிவித்துள்ளார்