நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு புதிய பி.சி.ஆர் இயந்திரம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.கொழும்பில் இடம்பெற்ற கட்சி தலைவர்களுக்கு இடையிலான விசேட சந்திப்பில் நான் முன்வைத்த வேண்டுகோளுக்கு அமைய சுகாதார அமைச்சு இந்த கொரோனா காலத்தில் நுவரெலியா மாவட்ட மக்களின் நலன் கருதி புதிய பி.சி.ஆர் இயந்திரத்தை வழங்கியமைக்கு சுகாதார அமைச்சுக்கு இத்தருணத்தில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
கடந்த காலங்களில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் இயங்கி வந்த பி.சி.ஆர் பரிசோதணை இயந்திரம் செயலிழந்த நிலையில் இம்மாவட்ட மக்களுக்கு கொரோனா பரிசோதனைகளை உரிய முறையில் முன்னெடுக்க இயலாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் இவ்விடயம் தொடர்பாக கட்சி தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தில் நான் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு இன்று புதிய பி.சி.ஆர் இயந்திரம் கிடைக்கப்பட்டுள்ளது.
இதனூடாக நுவரெலியா மாவட்டத்தில் தங்கு தடையின்றி கொரோனா PCR பரிசோதனைகளை முன்னெடுத்து அறிக்கைகளை விரைவாக பெற்றுக்கொள்ள முடிகிறது.எமது மக்களுக்கான விரைவான சுகாதார சேவைக்கு வழிவகுத்த அரசுக்கும் சுகாதார அமைச்சுக்கும் மேலும் மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.