1000 ரூபாய்க்கு எவ்வளவு?கடையில் வாங்கினால்!

அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய சதொச நிவாரணப் பொதியை விநியோகிக்கும் இரண்டாவது கட்டம் இன்று (02) ஆரம்பிக்கப்படவுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாடு பூராகவும் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் இதனைக் கொள்வனவு செய்ய முடியும். தரமான பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவது இந்த வேலைத் திட்டத்தின் நோக்கமாகும்.

இவை முதல் 1000 ரூபாய் விலைக்கு பெற்றுக் கொடுக்கப்படுகின்றன.கடந்த காலங்களில் விநியோகித்த நிவாரணப் பொதியை விட இம்முறை மேலும் சில பொருட்கள் பொதியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஒரு கிலோ கிராம் சம்பா அரிசி

ஒரு கிலோ கிராம் நாட்டரிசி

ஒரு கிலோ கிராம் மாவு

ஒரு கிலோ கிராம் அவுஸ்திரேலியா சிகப்பு பருப்பு

ஒரு கிலோ கிராம் வௌ்ளை சீனி

200 கிராம் நெத்தலி ( தாய்லாந்து)

50 மில்லிலீற்றர் திரவ கிருமிநாசினி போத்தல்

முகக்கவசம் ஒன்று

100 கிராம் தேயிலை தூள்

50 கிராம் சோயா மீட் பெக்கெட் ஒன்று

100 கிராம் துண்டு மிளகாய்நிவாரணப் பொதியை பெற்றுக் கொள்ளும் நபர்களுக்கு 5 ரூபாய் விலைக்கழிவில் 400 கிராம் highland பால்மா பக்கெட் ஒன்றினையும் பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!