ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலம் சூரியன் நேயர்களுக்கு மிகவும் பிடித்த வர்ஷி இன்று சூரியனில் இருந்து தனது தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினார்.அவரது முகப்புத்தக பக்கத்தில் இது தொடர்பாக அவர் பதிவு ஒன்றை இட்டிருந்தார்.
அன்பார்ந்த என் உறவுகளுக்கு.
கடந்த ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலம், நான் சூரியன் FM ல் கடமையாற்றி வந்தேன். அன்று முதல் இன்று வரை எனது தொழிலை, என் கடமை என எண்ணி கடமையாற்றினேன். இதனால், எனக்கு கிடைத்த பரிசு, என் சூரிய உறவுகள் இதுவரை காலமும் வழங்கிய ஆதரவுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவிக்கின்றேன்.
அதேநேரம், இந்த நிலைமைக்கு வர காரணமாக இருந்த சூரியன் வானொலியை விட்டு, வெளியில் வரும் போது, மனதில் இனம் புரியாத கவலை.
ஆனாலும், விலக வேண்டிய கட்டாயம்.
எனது குழந்தைக்கு ஒரு தாயாக, எனது கடமையை நான் உரிய முறையில் நிறைவேற்றி, எனது மகனை தலை சிறந்த இடத்திற்கு கொண்டு வர வேண்டிய கட்டாயமே, சூரியனை விட்டு வெளியேற காரணம்.
“வாழ்க்கையில் ஒன்றை இழந்தால் மாத்திரமே, மற்றொன்றை அடைய முடியும்” என்ற கட்டாய சோதனை, இன்று விலக வேண்டிய இடத்திற்கு என்னை கொண்டு வந்தது.
தனிப்பட்ட காரணமே, இன்று என்னை இந்த தீர்மானத்தை எடுக்க தள்ளியது.
ஆனாலும், சூரியனுடனான தொடர்பு, இன்று போல் என்றும் தொடரும்.
என்னை இந்த நிலைமை அழைத்து வந்த, நிறுவன தலைவர் திரு.Rayyno Silva அவர்களுக்கு முதலில் நன்றி கூறுகின்றேன்.
அதேபோன்று, சூரியனின் சிரேஷ்ட ஆலோசகரான மறைந்த திரு.நடராஜ சிவம் அவர்களுக்கும், எனது இந்த தலை சிறந்த நிலைமைக்கு காரணம் என்பதை கூற வேண்டும்.
மறைந்த திரு.நடராஜ சிவம் அவருக்கு, நன்றியை கூற கடமைப்பட்டுள்ளேன்.
பணிப்பாளரான லோஷன் அண்ணா ARV Loshan, முன்னாள் பணிப்பாளரான நவனீதன் Navaneethan Selvarajah அண்ணா, பரணி அண்ணா Paraneetharan Murugesu, அஷ்ரஃப் அண்ணா Ashraff Ameer, Rj Chandru அண்ணா Sinnapunayagam Dilan அண்ணா Alagaratnam Nishanthan, அண்ணா, Sooriyan Ajith அண்ணா Menaka Thuraisingham Chandru அக்கா, உள்ளிட்டவர்களுக்க நன்றியை கூற கடமைப்பட்டுள்ளேன்.
அதேபோல, என்னுடன் கடமையாற்றிய சக அறிவிப்பாளர்கள், செய்திப் பிரிவு நண்பர்கள், விரிவாக்கல் பிரிவு நண்பர்கள், திட்டமிடல் பிரிவு நண்பர்கள், சந்தைப்படுத்தல் பிரிவு நண்பர்களுக்கும் நன்றி
மேலும், ABC நிறுவனத்தின் ஏனைய வானொலிகள் மற்றும் தொலைகாட்சியில் கடமையாற்றும் அனைவரையும் இங்கு நினைவூட்ட வேண்டும்.
மனமின்றி விடை பெற்றாலும், என் ரசிகர்களுடன் ஏதோ ஓர் வகையில் தொடர்பில் இருப்பேன்.
அன்பகலா பிரியங்களுடன் வர்ஷி
வர்ஷிக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்